• Jan 13 2025

இன, மத வன்முறைக்கு இனி இடமேயில்லை! - அதை மீண்டும் தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை! பிரதமர்

Chithra / Jan 10th 2025, 7:16 am
image


"இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை." - என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"இங்கு இன, மத வன்முறைகளை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள்." - என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

"எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள்." - என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும்." - என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன, மத வன்முறைக்கு இனி இடமேயில்லை - அதை மீண்டும் தூண்ட முயல்வோருக்குச் சிறைதான் வாழ்க்கை பிரதமர் "இலங்கையில் இனிமேல் இன, மத அவமதிப்புகளுக்கு, வன்முறைகளுக்கு இடமேயில்லை." - என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்."இங்கு இன, மத வன்முறைகளை மீண்டும் தூண்ட முயல்வோர் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுவார்கள்." - என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்."எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள்." - என்றும் அவர் குறிப்பிட்டார்."அப்படியானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தண்டனையை தேசிய மக்கள் சக்தி அரசு வரவேற்கும்." - என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement