நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
தாயக மக்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிலதிபர் திலித் ஜயவீரவை நன்கு அறிவேன். தனது உழைப்பால் அவர் முன்னேறியுள்ளார். ஆகவே இவ்வாறானவர் அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன்.
ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுத்ததால் எமது அரசாங்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்காக எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
சமஷ்டி ஆட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமில்லை - ரொஷான் ரணசிங்க திட்டவட்டம் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.தாயக மக்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தொழிலதிபர் திலித் ஜயவீரவை நன்கு அறிவேன். தனது உழைப்பால் அவர் முன்னேறியுள்ளார். ஆகவே இவ்வாறானவர் அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுத்ததால் எமது அரசாங்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டுக்காக எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம்.ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.