• Nov 28 2024

இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் -பிள்ளையான் அறிவிப்பு..!!

Tamil nila / May 11th 2024, 9:36 pm
image

இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற  தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க போட்டியிட்டால் அவரை வெல்ல வைப்பதற்கான ஆலோசனைகளை செய்து கொண்டிருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சாரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற மாவட்டத்தில் இடம்பெற்றுவரும்  கால நிலைக்கு சீரமைவான  நீர்ப்பாசன திட்டம்  தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மற்றும் ஜனாதிபதியின் உறுமய தொடர்பான திட்டம தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றிய இராஜாங்க அமைச்சா கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் உறுமய திட்டத்தின் ஊடாக காணி பகிந்தளிப்பு தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கிடையிலே அதன் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். 

நாட்டில் 20 இலச்சம் காணி துண்டுகளை விரைவாக வழங்க வேண்டும் என்ற  வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.

அதற்கு உதவி செய்யும் முகமாக  மட்டு மாவட்டத்தில்  27 ஆயிரம் ஏக்கர் காணி பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கின்றது.

அதனை விரைவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் அந்தவகையில் 514 பேருக்கான காணி பகிர்ந்தளிப்பு இடம்பெற்றுள்ளது.

எனவே இதில் உள்ள குறைபாடுகளை விரைவாக நிவர்தி செய்து கொண்டு அனைவருக்கும் உறுமய வேலைத்திட்டதின் ஊடாக விரைவாக காணி கையளிப்பு இடம்பெற ஏற்பாடு செய்துள்ளோம்.

அதில் நிர்வாக ரீதியாக மக்கள் காணி உறுதி பத்திரம் வழங்க அச்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாவட்டம் விவசாய மாவட்டம் உறுமய திட்டத்தில் இந்த உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தில் உலக வங்கி ஊடாக காலநிலை இடம் பெற்று வருகின்றது.

இது கடந்தகால பொருளாதார பிரச்சனை காரணமாக பின்னடைந்துள்ளதுடன் தற்போது அதில் வனபலபரிபாலன சபை மற்றும் தொல்லியல் திணைக்கள பிரச்சனை காரணமான  திட்டங்கள் அமுலாக்குவதில்  தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

அதில் சில பிணக்குகள் தீர்கப்பட்டுள்ளது சில திணைக்களம் சார்ந்த விடையங்களும்  அது தொடர்பான தீர்வுகளைகண்டுள்ளோம் அதேவேளை அந்த பிரதேசங்களுக்கு இருண்டு வாரத்தில் நேரே சென்று ஊக்கப்படுத்துவதும் அதன் தடைகளை நீக்கி கொடுப்பதும் 75 நாட்களில் ஆரம்பித்த பணிகளை முடிப்பது எனவும் அடுத்து சிறு திட்டங்களை பொது அமைப்புக்களுக்கு கொடுத்து முடிவுறுத்துவது எனவும்.    

இல் அடையாளப்படுத்தியவையை வேறு பிராந்தியத்தில் இருந்து ஒப்பந்தத்தை பெறுபவர்கள் இந்த களச் சூழல் தெரியாது எங்களுடைய வேலையாட்களின் மனநிலை தெரியாது சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது எனவே பணிப்பாளர் உலக வங்கியுடன் ஆலோசனை குழுவுடன் பேசி பிராந்தியத்தில் இருக்கின்ற ஓப்பந்த காரர்களை தெரிவு செய்தால் விரைவாக வேலைகளை முடித்து கொடுக்க முடியம் என நம்புகின்றோம்.

விவசாயத்தில்  இரட்டிப்பாக வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 2 இலச்சம் காணிகளில் நெல் செய்கின்றோம் இதில் இரண்டாவது போகத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் நெல் உற்பத்தி செய்கின்றோம் இதனை ஒரு இலச்சமாக 2025ம் ஆண்டு உயர்தி நவீன விவசாய துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது  இலக்கு.

மந்தனாறு திட்டம் நல்லாட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது ஜ.எவ்.எம் கொடுக்கல் வாங்கல் திட்டம் பூர்தியான பின்னர் பிரெஞ் அரசாங்கம் அந்த ஒப்பந்தம் கைசாத்திட்டது; அதில் 15 ஆயிரம் ஏக்கர் ஏனைய சிறிய திட்டங்கள் உடாக 5 ஆயிரம் ஏக்கரை கூட்டுவதற்கு அரசியல் ரீதியாக முன்னெடுத்துள்ளோம்.

மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 கோடி ரூபாவும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து சில உறுப்பினர்களுக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது மாவட்ட அபிவிருத்தி நிதிக்காக 500 மில்லியனுக்கு மேலாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வீதி அபிவிருத்திக்காக 6 பில்லியன் அளவில் ஆரம்பின்கப்பட்டுள்ளது இன்னும் 7 பில்லியன் அளவில் அடுத்த மாதம் வேலைதிட்ம் ஆரம்பிக்கவுள்ளது அதேவேளை உலக வங்கியின் திட்டத்தி 576 மில்லியன் அளவு எதிர்பாக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் 10 மாதத்தில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது  எனவே நாடாளுமன்ற தேர்தல் முதல் நடந்தால் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து

இருந்த போதும் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொண்டாக வேண்டும் நாடு ஒரு சிக்கலான சூழலில் இருந்தது அதில் இருந்து மீட்டு நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளார்.

நாங்கள் ஒரு தொங்கு பாலத்தால் நடந்து செல்வதாகவும் இந்த  பாலத்தை கடந்துதான் ஆகவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

எனவே அந்த பாலத்தை கடந்து உறுதியான ஒரு பொருளாதார கட்டமைப்பு உருவாக வேண்டுமாக இருந்தால் அவர் இந்த நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் எனது தனிப்பட்ட நிலையப்பாடு அது எங்களுடைய கட்சியில் பேசிவருகின்றோம்.

அடுத்த தலைவராக உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற  தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது அந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெல்ல வைப்பதற்கான ஆலோசனைகளை செய்து கொண்டிருக்கின்றோம் என்றார்.

இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் -பிள்ளையான் அறிவிப்பு. இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற  தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க போட்டியிட்டால் அவரை வெல்ல வைப்பதற்கான ஆலோசனைகளை செய்து கொண்டிருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சாரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற மாவட்டத்தில் இடம்பெற்றுவரும்  கால நிலைக்கு சீரமைவான  நீர்ப்பாசன திட்டம்  தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மற்றும் ஜனாதிபதியின் உறுமய தொடர்பான திட்டம தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றிய இராஜாங்க அமைச்சா கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.மாவட்டத்தில் உறுமய திட்டத்தின் ஊடாக காணி பகிந்தளிப்பு தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கிடையிலே அதன் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். நாட்டில் 20 இலச்சம் காணி துண்டுகளை விரைவாக வழங்க வேண்டும் என்ற  வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.அதற்கு உதவி செய்யும் முகமாக  மட்டு மாவட்டத்தில்  27 ஆயிரம் ஏக்கர் காணி பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கின்றது.அதனை விரைவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் அந்தவகையில் 514 பேருக்கான காணி பகிர்ந்தளிப்பு இடம்பெற்றுள்ளது.எனவே இதில் உள்ள குறைபாடுகளை விரைவாக நிவர்தி செய்து கொண்டு அனைவருக்கும் உறுமய வேலைத்திட்டதின் ஊடாக விரைவாக காணி கையளிப்பு இடம்பெற ஏற்பாடு செய்துள்ளோம்.அதில் நிர்வாக ரீதியாக மக்கள் காணி உறுதி பத்திரம் வழங்க அச்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மாவட்டம் விவசாய மாவட்டம் உறுமய திட்டத்தில் இந்த உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தில் உலக வங்கி ஊடாக காலநிலை இடம் பெற்று வருகின்றது.இது கடந்தகால பொருளாதார பிரச்சனை காரணமாக பின்னடைந்துள்ளதுடன் தற்போது அதில் வனபலபரிபாலன சபை மற்றும் தொல்லியல் திணைக்கள பிரச்சனை காரணமான  திட்டங்கள் அமுலாக்குவதில்  தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.அதில் சில பிணக்குகள் தீர்கப்பட்டுள்ளது சில திணைக்களம் சார்ந்த விடையங்களும்  அது தொடர்பான தீர்வுகளைகண்டுள்ளோம் அதேவேளை அந்த பிரதேசங்களுக்கு இருண்டு வாரத்தில் நேரே சென்று ஊக்கப்படுத்துவதும் அதன் தடைகளை நீக்கி கொடுப்பதும் 75 நாட்களில் ஆரம்பித்த பணிகளை முடிப்பது எனவும் அடுத்து சிறு திட்டங்களை பொது அமைப்புக்களுக்கு கொடுத்து முடிவுறுத்துவது எனவும்.    இல் அடையாளப்படுத்தியவையை வேறு பிராந்தியத்தில் இருந்து ஒப்பந்தத்தை பெறுபவர்கள் இந்த களச் சூழல் தெரியாது எங்களுடைய வேலையாட்களின் மனநிலை தெரியாது சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது எனவே பணிப்பாளர் உலக வங்கியுடன் ஆலோசனை குழுவுடன் பேசி பிராந்தியத்தில் இருக்கின்ற ஓப்பந்த காரர்களை தெரிவு செய்தால் விரைவாக வேலைகளை முடித்து கொடுக்க முடியம் என நம்புகின்றோம்.விவசாயத்தில்  இரட்டிப்பாக வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 2 இலச்சம் காணிகளில் நெல் செய்கின்றோம் இதில் இரண்டாவது போகத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் நெல் உற்பத்தி செய்கின்றோம் இதனை ஒரு இலச்சமாக 2025ம் ஆண்டு உயர்தி நவீன விவசாய துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது  இலக்கு.மந்தனாறு திட்டம் நல்லாட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது ஜ.எவ்.எம் கொடுக்கல் வாங்கல் திட்டம் பூர்தியான பின்னர் பிரெஞ் அரசாங்கம் அந்த ஒப்பந்தம் கைசாத்திட்டது; அதில் 15 ஆயிரம் ஏக்கர் ஏனைய சிறிய திட்டங்கள் உடாக 5 ஆயிரம் ஏக்கரை கூட்டுவதற்கு அரசியல் ரீதியாக முன்னெடுத்துள்ளோம்.மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 கோடி ரூபாவும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து சில உறுப்பினர்களுக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது மாவட்ட அபிவிருத்தி நிதிக்காக 500 மில்லியனுக்கு மேலாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வீதி அபிவிருத்திக்காக 6 பில்லியன் அளவில் ஆரம்பின்கப்பட்டுள்ளது இன்னும் 7 பில்லியன் அளவில் அடுத்த மாதம் வேலைதிட்ம் ஆரம்பிக்கவுள்ளது அதேவேளை உலக வங்கியின் திட்டத்தி 576 மில்லியன் அளவு எதிர்பாக்கின்றோம்.ஜனாதிபதி தேர்தல் 10 மாதத்தில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது  எனவே நாடாளுமன்ற தேர்தல் முதல் நடந்தால் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்துஇருந்த போதும் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொண்டாக வேண்டும் நாடு ஒரு சிக்கலான சூழலில் இருந்தது அதில் இருந்து மீட்டு நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளார்.நாங்கள் ஒரு தொங்கு பாலத்தால் நடந்து செல்வதாகவும் இந்த  பாலத்தை கடந்துதான் ஆகவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே அந்த பாலத்தை கடந்து உறுதியான ஒரு பொருளாதார கட்டமைப்பு உருவாக வேண்டுமாக இருந்தால் அவர் இந்த நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் எனது தனிப்பட்ட நிலையப்பாடு அது எங்களுடைய கட்சியில் பேசிவருகின்றோம்.அடுத்த தலைவராக உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற  தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது அந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெல்ல வைப்பதற்கான ஆலோசனைகளை செய்து கொண்டிருக்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement