"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்டத்துக்கமைய வீதியோர சிறு வியாபாரங்கள் அகற்றப்படுவதாகவும், அவ்வாறு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெரும்பான்மையான மக்களின் விருப்பிற்கு மதிப்பளித்து ஆட்சியமைத்துள்ள புதிய அரசாங்கம், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
24 அமைச்சுக்களையும் உள்ளடக்கிய வகையில் நாட்டிற்கு சிறந்த அடித்தளத்தை இடும் நோக்குடன் புதிய வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சாரம் என்ற அனைத்துப் அலகுகளையும் மீள கட்டியெழுப்புவதற்கு ஓர் உணர்வுபூர்வமான தேசிய திட்டத்துக்கமைய எமது கடமைகளை முன்னெடுத்துள்ளோம்.
தேர்தலின் பின்னர், வங்குரோத்தான நாட்டை மாத்திரம் நாம் பொறுப்பேற்கவில்லை.
அப்போது சர்வதேச நாடுகளிடையே இலங்கை மீதான நற்பெயர் தலைகீழாக இருந்தது.
இராஜத்தந்திர ரீதியில் தாள்த்தப்பட்டிருந்தோம், வெளிநாடுகளுக்கு செல்ல விசாக்களை பெற முடியாமலிருந்தது.
சமூகம் என்ற ரீதியில் பல நெருக்கடிகள் உருவாகியிருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.
இந்நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பிரதான மூன்று வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
"கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம் ஆகியனவே அவையாகும்.
நாட்டை சூழலியல், சமூகவியலுடன் இணைந்த நெறி முறையில் நாடை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல விஞ்ஞான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட "கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் எம்முடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது.
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வீதியோர சிறு வியாபாரங்கள் அகற்றப்படுவதாகவும், அவ்வாறு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான வேலைத்திட்டமல்ல. அதற்குரிய சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
வீதியோர சிறு வியாபாரங்கள் அகற்றப்படுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை; நளிந்த ஜயதிஸ்ஸ மறுப்பு. "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்டத்துக்கமைய வீதியோர சிறு வியாபாரங்கள் அகற்றப்படுவதாகவும், அவ்வாறு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பெரும்பான்மையான மக்களின் விருப்பிற்கு மதிப்பளித்து ஆட்சியமைத்துள்ள புதிய அரசாங்கம், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 24 அமைச்சுக்களையும் உள்ளடக்கிய வகையில் நாட்டிற்கு சிறந்த அடித்தளத்தை இடும் நோக்குடன் புதிய வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டின் சமூக, பொருளாதார, கலாச்சாரம் என்ற அனைத்துப் அலகுகளையும் மீள கட்டியெழுப்புவதற்கு ஓர் உணர்வுபூர்வமான தேசிய திட்டத்துக்கமைய எமது கடமைகளை முன்னெடுத்துள்ளோம்.தேர்தலின் பின்னர், வங்குரோத்தான நாட்டை மாத்திரம் நாம் பொறுப்பேற்கவில்லை. அப்போது சர்வதேச நாடுகளிடையே இலங்கை மீதான நற்பெயர் தலைகீழாக இருந்தது. இராஜத்தந்திர ரீதியில் தாள்த்தப்பட்டிருந்தோம், வெளிநாடுகளுக்கு செல்ல விசாக்களை பெற முடியாமலிருந்தது. சமூகம் என்ற ரீதியில் பல நெருக்கடிகள் உருவாகியிருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். இந்நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பிரதான மூன்று வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன."கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம் ஆகியனவே அவையாகும். நாட்டை சூழலியல், சமூகவியலுடன் இணைந்த நெறி முறையில் நாடை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல விஞ்ஞான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட "கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் எம்முடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது."கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வீதியோர சிறு வியாபாரங்கள் அகற்றப்படுவதாகவும், அவ்வாறு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான வேலைத்திட்டமல்ல. அதற்குரிய சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றார்.