• Nov 05 2026

வரி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்! – மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

Chithra / Nov 2nd 2026, 10:41 am
image


மக்களின் விருப்பம் அல்லது வெறுப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிதிக் கொள்கைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மக்களின் விருப்பத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசியமான பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.


நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப வரி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும், பெரும்பாலான மக்கள் வரி அதிகரிப்புகளை விரும்புவதில்லை. இதுபோன்ற கடினமான தீர்மானங்கள் சமூகத்தில் எதிர்ப்புகளையும் சில ஸ்திரமற்ற சூழ்நிலைகளையும் உருவாக்கக்கூடும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.


எனவே, வரிகளைக் குறைப்பதாலும் அதிகரிப்பதாலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.


மக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்டுவதன் மூலம் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 


வரி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் மக்களின் விருப்பம் அல்லது வெறுப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிதிக் கொள்கைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மக்களின் விருப்பத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசியமான பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கத் தவறினால், அதன் விளைவுகள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப வரி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும், பெரும்பாலான மக்கள் வரி அதிகரிப்புகளை விரும்புவதில்லை. இதுபோன்ற கடினமான தீர்மானங்கள் சமூகத்தில் எதிர்ப்புகளையும் சில ஸ்திரமற்ற சூழ்நிலைகளையும் உருவாக்கக்கூடும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.எனவே, வரிகளைக் குறைப்பதாலும் அதிகரிப்பதாலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.மக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்டுவதன் மூலம் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement