• May 22 2025

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது - பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

Chithra / May 22nd 2025, 9:21 am
image

 

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்திய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், 

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதன்போது சுமார் 456 மாணவர்களின்   ஒரு சில பாடங்களுக்கான பெறுபேறு இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

அந்த மாணவர்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அழைத்து நேர்முக விசாரணை ஒன்றும் நடத்தி இருக்கிறது. 

பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் குறுகிய காலமே இருக்கின்ற நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த இடைநிறுத்தப்பட்டிருக்கும் பெறுபேறுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. 

அதனால் கல்வி அமைச்சர் என்றவகையில் பிரதமர் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, இந்த பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

இதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்களில், அந்த பிரச்சினையில் இருந்து விடுதலையாகும் மாணவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிக்கும். 

அதனால் மீள் திருத்தம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தையும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.என்றார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது - பிரதமர் ஹரிணி தெரிவிப்பு  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று  எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்திய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதன்போது சுமார் 456 மாணவர்களின்   ஒரு சில பாடங்களுக்கான பெறுபேறு இடை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த மாணவர்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அழைத்து நேர்முக விசாரணை ஒன்றும் நடத்தி இருக்கிறது. பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் குறுகிய காலமே இருக்கின்ற நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த இடைநிறுத்தப்பட்டிருக்கும் பெறுபேறுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதனால் கல்வி அமைச்சர் என்றவகையில் பிரதமர் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, இந்த பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.இதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்களில், அந்த பிரச்சினையில் இருந்து விடுதலையாகும் மாணவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிக்கும். அதனால் மீள் திருத்தம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தையும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement