• Sep 22 2024

தமிழ்த்தேசிய முன்னணி மீது பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வருகின்றனர் -சுகாஸ் கண்டனம் !

Tamil nila / Jan 26th 2023, 4:13 pm
image

Advertisement

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் , நாட்டுப்பற்றாளன் நடேசன் , நாட்டுப்பற்றாளன் சத்தியமூர்த்தி , 

மாமனிதர் சிவராம் மற்றும், ஊடகவியளாளர் நிமலராஜன் எனப் பல ஊடகவியளாளர்களால் ஊடகத்துறை தலை நிமிர்ந்து நின்றது. தமிழ்த் தேசியத்துக்காக, நேர்மையான பணியை முன்னெடுத்திருந்தனர்.


ஆனால், அவற்றுக்கு மாறாக தற்சமயம் தேர்தல் காலத்தில் சில ஊடகங்கள் சில தகவல்களை சலுகைகளுக்கு அடிபணிந்து  தவறான செய்திகளை வெளியிட்டு வருவதானது கண்டிக்கத்தக்கது. 


இவ்வாறு முன்னெடுப்பது தமிழினத்திற்கு செய்யும் பாரிய துரோகமாகும். ஏனைய தரப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கி பயணித்துக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் தமிழ்த் தேசத்திற்கான பாதையில் பற்றுறுதியுடன் பயணிக்கும் ஒரேயொரு கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் பயணிக்கின்றது. 


அந்த வகையில்,  தமிழ்த்தேசிய முன்னணியை அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வருகின்றனர். இன்று காலை அச்சு ஊடகத்திற்கு சொந்தமான இணையத்தளம் ஒரு பொய்யான செய்தியை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கெதிராகவும் எனக்கெதிராகவும் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். சுன்னாகத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்காக ஆஜராகியதாக பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தனர்.


இதை எண்ணி நாம் கவலைப்படுகின்றோம். ஊடகங்கள் இன்று விலைபோய்க்கொண்டிருக்கின்றன. 2009 ம் ஆண்டுக்கு முன்னர் தமிழர் தேசத்தின் வலிகளை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிக்காட்டி தமிழ்த் தேசியத்தின் தூணாகச் செயற்பட்டனர். 


அந்த வகையில் தான் குறித்த செய்தியைப் பிரசுரித்த ஊடகத்தின் பெயரை வெளியிட விரும்பவில்லை. அவ்வாறு வெளியிட்டால் நேர்மையாக ஊடகப்பணியை மேற்கொள்ளும் ஏனையவர்களையும் களங்கப்படுத்துவதாக அமைந்து விடும்.


சமூகப் பரப்பில் சில வழக்குகளை மோசமான வழக்குகளாக பார்த்தார்கள். ஆயினும்  அதில் சட்டத்தரணிகள் ஆஜராவது வழக்கமான விடயமாகும். அந்த வகையில் சட்டத்தரணியின் பெயரை குறிப்பிடாது சட்டத்தரணி ஆஜரானார் என்ற செய்திகளே ஊடகங்களில்  வழமையாக பிரசுரமாகும் நிலை காணப்படுகையில்  நான் ஆஜராகாத வழக்கிற்கு எனது பெயரையும் கட்சியின் பெயரையும் இணைத்து ஆஜரானேன் என்று பொய்யான செய்தியை வெளியிட்டமையானது வேதனையளிக்கின்றது.


குறித்த செய்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட நீங்கள் நேர்மையானவர்கள் என்றால் தடித்த எழுத்துக்களில் தவறான செய்திகளை பிரசுரித்து விட்டோம் என்று பத்திரிகைகளிலும் இலத்திரனியல் தளங்களிலும் செய்தியைப் பதிவிடுங்கள் அது ஊடக தர்மத்தை நிலைநாட்டுவதாக அமையும் என பகிரங்க சவால் விடுக்கின்றேன் என்றார்


தமிழ்த்தேசிய முன்னணி மீது பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வருகின்றனர் -சுகாஸ் கண்டனம் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் , நாட்டுப்பற்றாளன் நடேசன் , நாட்டுப்பற்றாளன் சத்தியமூர்த்தி , மாமனிதர் சிவராம் மற்றும், ஊடகவியளாளர் நிமலராஜன் எனப் பல ஊடகவியளாளர்களால் ஊடகத்துறை தலை நிமிர்ந்து நின்றது. தமிழ்த் தேசியத்துக்காக, நேர்மையான பணியை முன்னெடுத்திருந்தனர்.ஆனால், அவற்றுக்கு மாறாக தற்சமயம் தேர்தல் காலத்தில் சில ஊடகங்கள் சில தகவல்களை சலுகைகளுக்கு அடிபணிந்து  தவறான செய்திகளை வெளியிட்டு வருவதானது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு முன்னெடுப்பது தமிழினத்திற்கு செய்யும் பாரிய துரோகமாகும். ஏனைய தரப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கி பயணித்துக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் தமிழ்த் தேசத்திற்கான பாதையில் பற்றுறுதியுடன் பயணிக்கும் ஒரேயொரு கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் பயணிக்கின்றது. அந்த வகையில்,  தமிழ்த்தேசிய முன்னணியை அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வருகின்றனர். இன்று காலை அச்சு ஊடகத்திற்கு சொந்தமான இணையத்தளம் ஒரு பொய்யான செய்தியை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கெதிராகவும் எனக்கெதிராகவும் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். சுன்னாகத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்காக ஆஜராகியதாக பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தனர்.இதை எண்ணி நாம் கவலைப்படுகின்றோம். ஊடகங்கள் இன்று விலைபோய்க்கொண்டிருக்கின்றன. 2009 ம் ஆண்டுக்கு முன்னர் தமிழர் தேசத்தின் வலிகளை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிக்காட்டி தமிழ்த் தேசியத்தின் தூணாகச் செயற்பட்டனர். அந்த வகையில் தான் குறித்த செய்தியைப் பிரசுரித்த ஊடகத்தின் பெயரை வெளியிட விரும்பவில்லை. அவ்வாறு வெளியிட்டால் நேர்மையாக ஊடகப்பணியை மேற்கொள்ளும் ஏனையவர்களையும் களங்கப்படுத்துவதாக அமைந்து விடும்.சமூகப் பரப்பில் சில வழக்குகளை மோசமான வழக்குகளாக பார்த்தார்கள். ஆயினும்  அதில் சட்டத்தரணிகள் ஆஜராவது வழக்கமான விடயமாகும். அந்த வகையில் சட்டத்தரணியின் பெயரை குறிப்பிடாது சட்டத்தரணி ஆஜரானார் என்ற செய்திகளே ஊடகங்களில்  வழமையாக பிரசுரமாகும் நிலை காணப்படுகையில்  நான் ஆஜராகாத வழக்கிற்கு எனது பெயரையும் கட்சியின் பெயரையும் இணைத்து ஆஜரானேன் என்று பொய்யான செய்தியை வெளியிட்டமையானது வேதனையளிக்கின்றது.குறித்த செய்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட நீங்கள் நேர்மையானவர்கள் என்றால் தடித்த எழுத்துக்களில் தவறான செய்திகளை பிரசுரித்து விட்டோம் என்று பத்திரிகைகளிலும் இலத்திரனியல் தளங்களிலும் செய்தியைப் பதிவிடுங்கள் அது ஊடக தர்மத்தை நிலைநாட்டுவதாக அமையும் என பகிரங்க சவால் விடுக்கின்றேன் என்றார்

Advertisement

Advertisement

Advertisement