• May 04 2025

கட்சி பேதங்களை தாண்டி சிந்தித்து சரியானவருக்கு வாக்களியுங்கள்: அங்கஜன் வேண்டுகோள்..!

Sharmi / May 3rd 2025, 10:21 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், மக்கள் கட்சி பேதங்களை தாண்டி சிந்தித்து சரியானவருக்கு வாக்களிக்குமாறு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பில் அவரால் இன்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அன்பு நிறைந்த வாக்காளர்களே,  கடந்த காலங்களில் நீங்கள் எமக்கு அளித்த ஆதரவிற்கு என் நன்றிகள். மாற்றத்திற்காக நீங்கள் வழங்கிய கட்டளைக்கு நான் மதிப்பளிக்கிறேன். 

6 மாத காலங்கள் தேர்தல் களத்திலும் அரசியல் களத்திலும் நான் இல்லாவிட்டாலும் எமது மக்கள் பற்றியும், எமது கிராமங்களின் விருத்தி தொடர்பிலும் என் அக்கறை இப்போதும் தொடர்கிறது. 

மாதக்கணக்குகளை கூறி காலத்தை இழுத்தடிக்காமல் கடந்த காலங்களில் என் கனவு யாழ் செயற்றிட்டப் பயணத்தில் உங்கள் அனைத்துக் கிராமங்களிலும் பணியாற்றி, ஏராளமான அபிவிருத்திகளை செய்துள்ளதன் அடிப்படையில் இந்த தேர்தல் தொடர்பாக நான் இதனை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எதிர்வரும் மே 6ஆம் திகதி வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்களிக்கும்போது, கட்சிகளையும் சின்னங்களையும் பார்க்காமல், உங்கள் ஊருக்காகப் பாடுபடக்கூடியவருக்கு வாக்களியுங்கள். 

யார் கடந்த காலத்திலும் இப்பொழுதும் உங்கள் ஊரின் முன்னேற்றத்திற்காக உழைத்திருக்கிறார்கள் என்று பார்த்துத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளான வீதிகள், தெரு விளக்குகள், சாக்கடைகள், குளங்கள், இடுகாடுகள் போன்றவற்றை மேம்படுத்தும் எண்ணத்தைக் கொண்டவரே உங்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். 

வாய்ச்சவடால்களில் சிறந்தவர்களை புறந்தள்ளி செயற்பாட்டில் சிறந்தவர்களை தெரிவுசெய்யுங்கள். மேடைப்பேச்சுகளும் மதிமயக்கும் வாக்குறுதிகளும் உங்கள் கிராமத்தை அபிவிருத்தி செய்யப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கிராமத்தின் வெற்றி உங்கள் கைகளில் உள்ளது. உங்கள் ஊரின் வளர்ச்சி உங்கள் வாக்குகளில் அடங்கியுள்ளது. உங்களுடைய கிராமத்தின் பெருமையும் கௌரவமும் உங்கள் பிரதிநிதியால்தான் நிலைநாட்டப்படும்.

கட்சிபேதங்களை தாண்டி சிந்தித்து சரியானவருக்கு வாக்களியுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி பேதங்களை தாண்டி சிந்தித்து சரியானவருக்கு வாக்களியுங்கள்: அங்கஜன் வேண்டுகோள். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், மக்கள் கட்சி பேதங்களை தாண்டி சிந்தித்து சரியானவருக்கு வாக்களிக்குமாறு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்இது தொடர்பில் அவரால் இன்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஅன்பு நிறைந்த வாக்காளர்களே,  கடந்த காலங்களில் நீங்கள் எமக்கு அளித்த ஆதரவிற்கு என் நன்றிகள். மாற்றத்திற்காக நீங்கள் வழங்கிய கட்டளைக்கு நான் மதிப்பளிக்கிறேன். 6 மாத காலங்கள் தேர்தல் களத்திலும் அரசியல் களத்திலும் நான் இல்லாவிட்டாலும் எமது மக்கள் பற்றியும், எமது கிராமங்களின் விருத்தி தொடர்பிலும் என் அக்கறை இப்போதும் தொடர்கிறது. மாதக்கணக்குகளை கூறி காலத்தை இழுத்தடிக்காமல் கடந்த காலங்களில் என் கனவு யாழ் செயற்றிட்டப் பயணத்தில் உங்கள் அனைத்துக் கிராமங்களிலும் பணியாற்றி, ஏராளமான அபிவிருத்திகளை செய்துள்ளதன் அடிப்படையில் இந்த தேர்தல் தொடர்பாக நான் இதனை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.எதிர்வரும் மே 6ஆம் திகதி வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்களிக்கும்போது, கட்சிகளையும் சின்னங்களையும் பார்க்காமல், உங்கள் ஊருக்காகப் பாடுபடக்கூடியவருக்கு வாக்களியுங்கள். யார் கடந்த காலத்திலும் இப்பொழுதும் உங்கள் ஊரின் முன்னேற்றத்திற்காக உழைத்திருக்கிறார்கள் என்று பார்த்துத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளான வீதிகள், தெரு விளக்குகள், சாக்கடைகள், குளங்கள், இடுகாடுகள் போன்றவற்றை மேம்படுத்தும் எண்ணத்தைக் கொண்டவரே உங்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். வாய்ச்சவடால்களில் சிறந்தவர்களை புறந்தள்ளி செயற்பாட்டில் சிறந்தவர்களை தெரிவுசெய்யுங்கள். மேடைப்பேச்சுகளும் மதிமயக்கும் வாக்குறுதிகளும் உங்கள் கிராமத்தை அபிவிருத்தி செய்யப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் கிராமத்தின் வெற்றி உங்கள் கைகளில் உள்ளது. உங்கள் ஊரின் வளர்ச்சி உங்கள் வாக்குகளில் அடங்கியுள்ளது. உங்களுடைய கிராமத்தின் பெருமையும் கௌரவமும் உங்கள் பிரதிநிதியால்தான் நிலைநாட்டப்படும்.கட்சிபேதங்களை தாண்டி சிந்தித்து சரியானவருக்கு வாக்களியுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement