• Oct 19 2024

யாழில் திருலங்காபுரி சைவ ஆதீனம் திறப்பு- பௌத்த துறவிகளின் பங்கேற்புடன் புத்தர் சிலையும் வைக்கப்பட்டது! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 7:53 pm
image

Advertisement

பருத்தித்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட திருலங்காபுரி சைவ ஆதீன திறப்பு விழா இன்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.


சைவ சமய விக்கிரகங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் புத்தபெருமானின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

மிகக் குறைந்தளவு சைவ சமயத்தவர்கள் பங்கெடுத்ததுடன்   திறப்பு விழாவிற்கு குருநாதல் உமங்தாவ கிராமத்திலிருந்து 10 க்கு மேற்பட்ட பிக்குகள் வருகை தந்ததுடன் நாக விகாராதிபதியும் கலந்து கொண்டார். இவர்களுடன் ஏராளமான பௌத்த மக்களும் பங்கெடுத்திருந்தனர்.

இதேவேளை விகாரையில் பிரதிஸ்டை செய்வதற்கு சிவலிங்கமொன்று அன்பளிப்பாக பிக்குகளிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் யாழ் சிவில் சமூக பிரதிநிதி அருண் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.


குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பிக்குகள்  உரையாற்றுகையில் வடக்கிற்கும் தெற்கிற்குமான நல்லிணக்கத்தின் ஆரம்பப் படிநிலைசெயற்பாடே இச் செயற்பாடென குறிப்பிட்டிருந்தனர்.



குறித்த ஆதீனத்தை நிர்வகித்து வரும் விபுலானந்தா சுவாமிகள் யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் பருத்தித்துறை வீதியில் குறித்த  ஆதீனத்தை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்த்தக்கது.

யாழில் திருலங்காபுரி சைவ ஆதீனம் திறப்பு- பௌத்த துறவிகளின் பங்கேற்புடன் புத்தர் சிலையும் வைக்கப்பட்டது samugammedia பருத்தித்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட திருலங்காபுரி சைவ ஆதீன திறப்பு விழா இன்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.சைவ சமய விக்கிரகங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் புத்தபெருமானின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.மிகக் குறைந்தளவு சைவ சமயத்தவர்கள் பங்கெடுத்ததுடன்   திறப்பு விழாவிற்கு குருநாதல் உமங்தாவ கிராமத்திலிருந்து 10 க்கு மேற்பட்ட பிக்குகள் வருகை தந்ததுடன் நாக விகாராதிபதியும் கலந்து கொண்டார். இவர்களுடன் ஏராளமான பௌத்த மக்களும் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை விகாரையில் பிரதிஸ்டை செய்வதற்கு சிவலிங்கமொன்று அன்பளிப்பாக பிக்குகளிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் யாழ் சிவில் சமூக பிரதிநிதி அருண் சித்தார்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பிக்குகள்  உரையாற்றுகையில் வடக்கிற்கும் தெற்கிற்குமான நல்லிணக்கத்தின் ஆரம்பப் படிநிலைசெயற்பாடே இச் செயற்பாடென குறிப்பிட்டிருந்தனர்.குறித்த ஆதீனத்தை நிர்வகித்து வரும் விபுலானந்தா சுவாமிகள் யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் பருத்தித்துறை வீதியில் குறித்த  ஆதீனத்தை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்த்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement