• Jan 04 2025

கடந்த அரசு போல் இந்த அரசு இல்லை - சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை! அமைச்சர் திட்டவட்டம்

Chithra / Dec 29th 2024, 4:18 pm
image

"கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது." - என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"கடந்த அரசுகள் போல் இந்த அரசையும் எவரும் நினைத்துவிடக்கூடாது. இது குறுக்குவழியில் வந்த அரசு அல்ல. ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள் அலையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இது.

கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. 

கடந்த ஆட்சிகளில் சட்டவிரோத மதத் தலங்களே மத வன்முறைக்கு வழிவகுத்தது. அது இறுதியில் இன வன்முறையாக வெடித்தது. அப்படியான அராஜக நடவடிக்கைகளை இந்த ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது.

குழப்பவாதிகள் எவரும் இருந்தால் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்யும்." - என்றார்.

கடந்த அரசு போல் இந்த அரசு இல்லை - சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை அமைச்சர் திட்டவட்டம் "கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது." - என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"கடந்த அரசுகள் போல் இந்த அரசையும் எவரும் நினைத்துவிடக்கூடாது. இது குறுக்குவழியில் வந்த அரசு அல்ல. ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள் அலையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இது.கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. கடந்த ஆட்சிகளில் சட்டவிரோத மதத் தலங்களே மத வன்முறைக்கு வழிவகுத்தது. அது இறுதியில் இன வன்முறையாக வெடித்தது. அப்படியான அராஜக நடவடிக்கைகளை இந்த ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது.குழப்பவாதிகள் எவரும் இருந்தால் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்யும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement