• Nov 20 2024

வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு இதுதான் காரணம்- யோதிலிங்கம் சுட்டிக்காட்டு..!

Sharmi / Nov 19th 2024, 5:07 pm
image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் செல்லுபடியான வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம்(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம்.

யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக வந்துள்ளது.

இது தேசிய மக்கள் சக்தியே எதிர்பார்க்காத வெற்றியாகும். வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை.

தமிழ்த் தேசிய வாக்குகளுக்கு வெளியே இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் இராமநாதன் ஆகியோரின் வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய வாக்குகளில் 15,000 வரையிலான வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது எனலாம்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதனாலேயே அதிக ஆசனங்களை பெறக்கூடியதாக இருந்தது.

வீட்டிற்கு விழுந்த வாக்குகளையும், சங்கிற்கு விழுந்த வாக்குகளையும், தவராசா தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வாக்குகளையும் சேர்த்து கூட்டினால் தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகள் குறைவானவை.

இந்த மூன்று தரப்பும் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்திருக்கும்.

போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும்.

தேர்தலில் தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22513 வாக்குகளையும் தவராசா தலைமையிலான சுயேட்சைக் குழு 7,496 வாக்குகளையும் பெற்றிருந்தது. மூன்று தரப்பின் வாக்குகளையும் கூட்டினால் 93,336 கிடைத்திருக்கும்.

தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளையே பெற்றிருந்தது. இதனுடன் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணி பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு என்பவற்றின் வாக்குகளையும் கூட்டினால் 135,870 வாக்குகள் கிடைத்திருக்கும் .

இதன்படி ஐந்து ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் 1ஆசனம் மட்டும் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி 27,986 வாக்குகளையும் தமிழ் மக்கள் கூட்டணி 13,295 வாக்குகளையும், மருத்துவர் நந்தகுமார் முயற்சியினால் பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு 1262 வாக்குகளையும் பெற்றிருந்தது.

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இதே நிலைதான். அங்கு தமிழரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதேவேளை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21,102 வாக்குகள் அளிக்கப்பட்டது. இரண்டையும் கூட்டினால் 50,813 வாக்குகள் கிடைத்திருக்கும்.

இது தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளை விட அதிகமானது. தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்றிருந்தது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் போனஸ் ஆசனம் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும். முதன்மை நிலையைப் பெற்றிருக்கலாம். கூட்டாக பிரச்சாரம் செய்தால் 3 ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு இதுதான் காரணம்- யோதிலிங்கம் சுட்டிக்காட்டு. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் செல்லுபடியான வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம்(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம். யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக வந்துள்ளது. இது தேசிய மக்கள் சக்தியே எதிர்பார்க்காத வெற்றியாகும். வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை. தமிழ்த் தேசிய வாக்குகளுக்கு வெளியே இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் இராமநாதன் ஆகியோரின் வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது. தமிழ்த் தேசிய வாக்குகளில் 15,000 வரையிலான வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது எனலாம்.தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதனாலேயே அதிக ஆசனங்களை பெறக்கூடியதாக இருந்தது. வீட்டிற்கு விழுந்த வாக்குகளையும், சங்கிற்கு விழுந்த வாக்குகளையும், தவராசா தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வாக்குகளையும் சேர்த்து கூட்டினால் தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகள் குறைவானவை. இந்த மூன்று தரப்பும் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்திருக்கும். போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும்.தேர்தலில் தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22513 வாக்குகளையும் தவராசா தலைமையிலான சுயேட்சைக் குழு 7,496 வாக்குகளையும் பெற்றிருந்தது. மூன்று தரப்பின் வாக்குகளையும் கூட்டினால் 93,336 கிடைத்திருக்கும்.தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளையே பெற்றிருந்தது. இதனுடன் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணி பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு என்பவற்றின் வாக்குகளையும் கூட்டினால் 135,870 வாக்குகள் கிடைத்திருக்கும் .இதன்படி ஐந்து ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் 1ஆசனம் மட்டும் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி 27,986 வாக்குகளையும் தமிழ் மக்கள் கூட்டணி 13,295 வாக்குகளையும், மருத்துவர் நந்தகுமார் முயற்சியினால் பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு 1262 வாக்குகளையும் பெற்றிருந்தது.வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இதே நிலைதான். அங்கு தமிழரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதேவேளை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21,102 வாக்குகள் அளிக்கப்பட்டது. இரண்டையும் கூட்டினால் 50,813 வாக்குகள் கிடைத்திருக்கும்.இது தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளை விட அதிகமானது. தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்றிருந்தது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் போனஸ் ஆசனம் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும். முதன்மை நிலையைப் பெற்றிருக்கலாம். கூட்டாக பிரச்சாரம் செய்தால் 3 ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement