• May 17 2024

இந்த மண் தமிழர்களிடமிருந்து பறிபோகக் கூடிய அபாயகர சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது! இ.கதிர்

Chithra / Jan 7th 2023, 12:41 pm
image

Advertisement

தமிழ் மக்களுடைய விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் பேரியக்கமாக தாயகத்தில் இருந்து

தாம் செயற்பட்டு வருவதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை புச்சாக்கேணி பிரதேசத்தில் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் வாகரை மண்ணிலே, ஜனநாயக வழிப் போராட்டமானது  இன்று மக்கள் எழுச்சி கொண்டிருப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்ததாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் எழுச்சியானது, எதிர்காலத்தில் இந்த மண்ணில் கொண்டாடுவதானது, தமிழ்த் தேசிய எழுச்சியினுடைய வெற்றியின் ஆரம்ப நாளாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண் தமிழர்களிடமிருந்து பறிபோகக் கூடிய ஒரு அபாயகரமான சூழலுக்குள் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு என்பது தனித்தனியானவை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாயகமென்பது வடகிழக்கு இணைந்து என்றும் தற்போது பிரிக்கப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும்

எதிர்காலத்தில் ஒன்றாக இணைத்து பலம்மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் ஊடாகத்தான்

ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு மாகாணத்தை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்த மண் தமிழர்களிடமிருந்து பறிபோகக் கூடிய அபாயகர சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது இ.கதிர் தமிழ் மக்களுடைய விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் பேரியக்கமாக தாயகத்தில் இருந்துதாம் செயற்பட்டு வருவதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை புச்சாக்கேணி பிரதேசத்தில் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.மட்டக்களப்பில் வாகரை மண்ணிலே, ஜனநாயக வழிப் போராட்டமானது  இன்று மக்கள் எழுச்சி கொண்டிருப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்ததாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் எழுச்சியானது, எதிர்காலத்தில் இந்த மண்ணில் கொண்டாடுவதானது, தமிழ்த் தேசிய எழுச்சியினுடைய வெற்றியின் ஆரம்ப நாளாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மண் தமிழர்களிடமிருந்து பறிபோகக் கூடிய ஒரு அபாயகரமான சூழலுக்குள் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு என்பது தனித்தனியானவை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.தாயகமென்பது வடகிழக்கு இணைந்து என்றும் தற்போது பிரிக்கப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும்எதிர்காலத்தில் ஒன்றாக இணைத்து பலம்மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் ஊடாகத்தான்ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு மாகாணத்தை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement