• Jul 05 2024

இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - கர்தினால் ஆவேசம்

Chithra / Jul 3rd 2024, 12:08 pm
image

Advertisement

 

இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி, மனித உரிமைகளை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மன்னார் மருதமடு தேவாலயத்தின் நூற்றாண்டு திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை உண்டாக்கியவாறு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கொள்கை, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேலும் வலுவடைந்தது.

இன, மத பேதங்களை உண்டாக்கியதுடன், நாட்டைத் துண்டாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த அரசியல்வாதிகளே இவ்வாறான கொள்கைகளைக் கொண்டு சென்றதுடன், தொடர்ந்தும் கொண்டு செல்கின்றனர்.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படும் தற்போதைய நாட்களில் தமிழ் மக்கள் தங்களது அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும்.

இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கர்தினால் ஆவேசம்  இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி, மனித உரிமைகளை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.மன்னார் மருதமடு தேவாலயத்தின் நூற்றாண்டு திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இனங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை உண்டாக்கியவாறு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கொள்கை, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேலும் வலுவடைந்தது.இன, மத பேதங்களை உண்டாக்கியதுடன், நாட்டைத் துண்டாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த அரசியல்வாதிகளே இவ்வாறான கொள்கைகளைக் கொண்டு சென்றதுடன், தொடர்ந்தும் கொண்டு செல்கின்றனர்.13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படும் தற்போதைய நாட்களில் தமிழ் மக்கள் தங்களது அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும்.இன, மத பேதங்களைத் தூண்டிவிட்டு, ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement