• Mar 15 2025

முல்லைத்தீவு காட்டு பகுதியில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்

Chithra / Mar 15th 2025, 12:58 pm
image

 

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான  வெடிக்காத துப்பாக்கி ரவைகள்  முல்லைத்தீவு பொலிஸாரால்  மீட்கப்பட்ட சம்பவம் நேற்றையதினம்  மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு பார்த்தபோது உரப்பை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த உரப்பையில் இருந்து மீட்கப்பட்ட 1,400 ரி56 ரக துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த துப்பாக்கி ரவைகள் வெடிக்காத நிலையில் பழுதடைந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு காட்டு பகுதியில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்  முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான  வெடிக்காத துப்பாக்கி ரவைகள்  முல்லைத்தீவு பொலிஸாரால்  மீட்கப்பட்ட சம்பவம் நேற்றையதினம்  மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு பார்த்தபோது உரப்பை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.குறித்த உரப்பையில் இருந்து மீட்கப்பட்ட 1,400 ரி56 ரக துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.எனினும் இந்த துப்பாக்கி ரவைகள் வெடிக்காத நிலையில் பழுதடைந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement