விவசாயப்பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வன விலங்குகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு விவசாய மற்றும் கால்நடைவளம்m, நிலம், நீர்ப்பாசன அமைச்சினால் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம சேவகர் பிரிவிலும் இது செயல்படுத்தப்பட்டது.
விவசாயப் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வன விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு ஆரம்பம் விவசாயப்பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வன விலங்குகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு விவசாய மற்றும் கால்நடைவளம்m, நிலம், நீர்ப்பாசன அமைச்சினால் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம சேவகர் பிரிவிலும் இது செயல்படுத்தப்பட்டது.