• Jan 16 2025

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து- ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்!

Tharmini / Jan 12th 2025, 12:29 pm
image

தென் அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தின் ஐந்து ஓடுபாதைகளும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டன.

டெல்டா விமான சேவை நிறுவனம் தங்கள் நெட்வொர்க் முழுவதும் சுமார் 1,100 விமானங்களை ரத்து செய்தது. ஆனால் சனிக்கிழமை சேவைகளை அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அட்லாண்டாவில் டெல்டா விமானம் ஒன்று எஞ்சின் பிரச்சனையால் புறப்படுவதை நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் 200க்கும் மேற்பட்ட பயணிகளும் விமான ஊழியர்களும் அவசர பாதை ஊடாக வெளியேற்றப்பட்டனர்.

டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் (டெக்சாஸ்) மற்றும் சார்லோட் டக்ளஸ் (வட கரோலினா) ஆகிய விமான நிலையங்களும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டன. இரண்டு விமான நிலையங்களிலும் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை மட்டும் பல விமான நிலையங்களில் மொத்தம் 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யபட்டன. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா ஏற்கனவே பனிப் புயலால் தாக்கப்பட்ட நிலையில், குறைந்தது ஐந்து பேர் மரணமடைந்தனர்.

பனிப்புயல் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை கடந்து சென்றதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயில் சிக்கி சாம்பல் காடாக மாறி வருகிறது. இதுவரை 11 பேர்கள் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டதுடன் 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருளாதார இழப்பு மற்றும் சேதங்களின் மொத்த மதிப்பு 150 பில்லியன் டொலர் தொகையை எட்டும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து- ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள் தென் அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தின் ஐந்து ஓடுபாதைகளும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டன.டெல்டா விமான சேவை நிறுவனம் தங்கள் நெட்வொர்க் முழுவதும் சுமார் 1,100 விமானங்களை ரத்து செய்தது. ஆனால் சனிக்கிழமை சேவைகளை அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இதனிடையே, அட்லாண்டாவில் டெல்டா விமானம் ஒன்று எஞ்சின் பிரச்சனையால் புறப்படுவதை நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் 200க்கும் மேற்பட்ட பயணிகளும் விமான ஊழியர்களும் அவசர பாதை ஊடாக வெளியேற்றப்பட்டனர்.டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் (டெக்சாஸ்) மற்றும் சார்லோட் டக்ளஸ் (வட கரோலினா) ஆகிய விமான நிலையங்களும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டன. இரண்டு விமான நிலையங்களிலும் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.வெள்ளிக்கிழமை மட்டும் பல விமான நிலையங்களில் மொத்தம் 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யபட்டன. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா ஏற்கனவே பனிப் புயலால் தாக்கப்பட்ட நிலையில், குறைந்தது ஐந்து பேர் மரணமடைந்தனர்.பனிப்புயல் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை கடந்து சென்றதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயில் சிக்கி சாம்பல் காடாக மாறி வருகிறது. இதுவரை 11 பேர்கள் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டதுடன் 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.பொருளாதார இழப்பு மற்றும் சேதங்களின் மொத்த மதிப்பு 150 பில்லியன் டொலர் தொகையை எட்டும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement