• Nov 25 2024

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்; மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யலாம்..! பொலிஸார் அறிவிப்பு

Chithra / Mar 26th 2024, 7:54 am
image


இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் வீட்டிலிருந்து மின்னஞ்சல் ஊடாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது, 109 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்ட பிரச்சினைகளை அறிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பாதிக்கப்படும் நபர்கள் எந்நேரமும் தொடர்புகொண்டு உதவிகோர முடியும் எ்ன்றும் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்; மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யலாம். பொலிஸார் அறிவிப்பு இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் வீட்டிலிருந்து மின்னஞ்சல் ஊடாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனவே dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது, 109 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்ட பிரச்சினைகளை அறிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பாதிக்கப்படும் நபர்கள் எந்நேரமும் தொடர்புகொண்டு உதவிகோர முடியும் எ்ன்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement