• Apr 02 2025

கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது

Thansita / Mar 31st 2025, 6:26 pm
image

சாவகச்சேரியில் கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அன்மித்த பகுதியில்  மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர் ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது

இதன் போது கூலர் ரக வாகனத்துடன்20 மில்லியன் பெறுமதியான 96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் வவுனியாவை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று சாவகச்சேரி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது சாவகச்சேரியில் கேரள கஞ்சாவினை பொதி செய்து வாகனத்தில் ஏற்றிய மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுசாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அன்மித்த பகுதியில்  மீன்கள் ஏற்றிச்செல்ல பயண்படுத்தப்படும் கூலர் ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதுஇதன் போது கூலர் ரக வாகனத்துடன்20 மில்லியன் பெறுமதியான 96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் வவுனியாவை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்கைது செய்யப்பட்ட மூவரும் இன்று சாவகச்சேரி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement