• Mar 16 2025

யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது..!

Sharmi / Mar 15th 2025, 8:54 pm
image

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மாவா கலந்த கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுவில், நாகம்மாள் கோவில் வீதி பகுதியில் இன்று காலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவ்வாறு கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் 200 கிராமுடனும், மற்றையவர் 200 கிராமுடனும் மற்றையவர் 100 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். 

விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மாவா கலந்த கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.உடுவில், நாகம்மாள் கோவில் வீதி பகுதியில் இன்று காலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவ்வாறு கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒருவர் 200 கிராமுடனும், மற்றையவர் 200 கிராமுடனும் மற்றையவர் 100 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடனும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement