கிணற்றில் விழுந்து மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழ் நாடு கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின்(வயது 12), ஸ்ரீ விஷ்ணு (வயது 14) ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரைச் சேர்ந்த சிறுவன் மாரிமுத்து (வயது 13).
நண்பர்களான மூவரும் பாடசாலை விடுமுறைக் காலம் என்பதால் விளையாடுவதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளனர்.
இரவு வெகு நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர்கள் மூவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இவ்வாறு தேடும்போது அப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்திலுள்ள கிணற்றடியில் சிறுவர்கள் மூன்று பேரினதும் செருப்புகள் கிடைத்துள்ளன.
மேலும் பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் விரைந்தனர்.
மேலும் இரவு 12 மணியளவில் சிறுவர்கள் மூவரினமும் உடல்கள் குறித்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.
கிணற்றில் விழுந்து மூன்று சிறுவர்கள் பலி. காட்டிக்கொடுத்த செருப்புகள். கிணற்றில் விழுந்து மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் தமிழ் நாடு கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின்(வயது 12), ஸ்ரீ விஷ்ணு (வயது 14) ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரைச் சேர்ந்த சிறுவன் மாரிமுத்து (வயது 13).நண்பர்களான மூவரும் பாடசாலை விடுமுறைக் காலம் என்பதால் விளையாடுவதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளனர்.இரவு வெகு நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர்கள் மூவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர்.இவ்வாறு தேடும்போது அப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்திலுள்ள கிணற்றடியில் சிறுவர்கள் மூன்று பேரினதும் செருப்புகள் கிடைத்துள்ளன.மேலும் பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் விரைந்தனர்.மேலும் இரவு 12 மணியளவில் சிறுவர்கள் மூவரினமும் உடல்கள் குறித்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.