• Dec 04 2024

மூன்று மாணவிகள் மீது துஷ்பிரயோக முயற்சி- சிற்றூழியர் கைது ! samugammedia

Tamil nila / Dec 6th 2023, 7:43 am
image

வென்னப்புவ பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவருக்கும் தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அம்மாணவர்களின் உடல்களை தொட்டு பாலியல் சில்மிசம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமைபுரியும் சிற்றூழியர் ஊழியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் தலைமையக குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழுவினர் குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் நடத்தை பற்றி அந்த மூன்று மாணவிகளும், மாணவனும், பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து , இதிபற்றி பாடசாலையின் அதிபர் வென்னப்புவ தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.மேலும் , பாலியல் சில்மிசம் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும்  மூன்று மாணவிகளையும், மாணவியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். 

அத்துடன், குறித்த மாணவர்களுக்கு ஆபாச காட்சிகளை காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரின் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலின ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மூன்று மாணவிகள் மீது துஷ்பிரயோக முயற்சி- சிற்றூழியர் கைது samugammedia வென்னப்புவ பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவருக்கும் தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அம்மாணவர்களின் உடல்களை தொட்டு பாலியல் சில்மிசம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமைபுரியும் சிற்றூழியர் ஊழியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.வென்னப்புவ பொலிஸ் தலைமையக குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழுவினர் குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளைஞனின் நடத்தை பற்றி அந்த மூன்று மாணவிகளும், மாணவனும், பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து , இதிபற்றி பாடசாலையின் அதிபர் வென்னப்புவ தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.மேலும் , பாலியல் சில்மிசம் மற்றும் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும்  மூன்று மாணவிகளையும், மாணவியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மாணவர்களுக்கு ஆபாச காட்சிகளை காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரின் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலின ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement