• Jan 13 2025

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் - மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம்

Chithra / Jan 13th 2025, 12:57 pm
image


பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற ஊழியர்களில் பாராளுமன்றத்தின் சமையல் மற்றும் சிற்றூழிய துறையின் உதவி வீட்டுப் பணியாளரும் அடங்குகின்றனர்.

சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இவர்கள் இடைநீக்கம் செய்யபடுத்தப்பட்டதாக பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழுவால் உள் விசாரணை நடத்தப்பட்டது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஒகஸ்ட் 2023 இல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் - மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற ஊழியர்களில் பாராளுமன்றத்தின் சமையல் மற்றும் சிற்றூழிய துறையின் உதவி வீட்டுப் பணியாளரும் அடங்குகின்றனர்.சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இவர்கள் இடைநீக்கம் செய்யபடுத்தப்பட்டதாக பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழுவால் உள் விசாரணை நடத்தப்பட்டது.பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஒகஸ்ட் 2023 இல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement