• Nov 06 2024

அடுத்தடுத்து மூவர் சுட்டுக் கொலை - தென்னிலங்கையில் பெரும் பதற்றம்..!samugammedia

mathuri / Mar 12th 2024, 6:11 am
image

Advertisement

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது, நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. 

அதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, துப்பாக்கிச் சூட்டினால் 3 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பிடிகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் மேலும் இரு ஆண்களும் கலிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்தடுத்து மூவர் சுட்டுக் கொலை - தென்னிலங்கையில் பெரும் பதற்றம்.samugammedia அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது, நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்தோடு, துப்பாக்கிச் சூட்டினால் 3 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பிடிகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் மேலும் இரு ஆண்களும் கலிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement