• Jan 09 2025

யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்துக்கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டி

Chithra / Jan 8th 2025, 7:32 am
image


வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற  முச்சக்கரவண்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத்  தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.

இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்து ஓடிச் சென்றார்.

தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்தது. எனினும், அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பினர்.


யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்துக்கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டி வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற  முச்சக்கரவண்டியால் பரபரப்பு ஏற்பட்டது.யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத்  தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்து ஓடிச் சென்றார்.தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றது.இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்தது. எனினும், அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பினர்.

Advertisement

Advertisement

Advertisement