அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து தென் திசையை நோக்கி காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ் வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து தென் திசையை நோக்கி காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ் வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.