கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்பு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் 50 mm இற்கு மேற்பட்ட மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும் பிற்பகல் 1 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் பொது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாட்டைச் சூழ உள்ள மற்ற கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சில கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிமீ வேகத்தில் தென்மேற்கில் இருந்து காற்று காணப்படும்.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 45 கிமீக்கும் மேற்பட்ட வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இவ்வாறான நேரங்களில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்றும், கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படும்.
நாட்டில் பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பொதுமக்களுக்கு எச்சரிக்கை கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்பு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் 50 mm இற்கு மேற்பட்ட மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் பிற்பகல் 1 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும்.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் பொது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நாட்டைச் சூழ உள்ள மற்ற கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.சில கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிமீ வேகத்தில் தென்மேற்கில் இருந்து காற்று காணப்படும். மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 45 கிமீக்கும் மேற்பட்ட வேகத்தில் பலத்த காற்று வீசும். இவ்வாறான நேரங்களில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்றும், கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படும்.