• Dec 14 2024

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்...! பாதுகாப்பு அரண்கள் தகர்ப்பு...!

Sharmi / May 25th 2024, 9:35 am
image

கிளிநொச்சியில் டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம்(25)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,  நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம். பாதுகாப்பு அரண்கள் தகர்ப்பு. கிளிநொச்சியில் டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம்(25)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில்,  நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement