• Jun 26 2024

திருமலையில் வெசாக் வலயம் கிழக்கு ஆளுநரால் திறந்து வைப்பு...!

Sharmi / May 25th 2024, 9:15 am
image

Advertisement

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை சேருவில -ரஜ மஹா விகாரையில் வெசாக் பௌர்ணமி நிகழ்வுகள் நேற்றையதினம்(24) மாலை இடம்பெற்றது.

இதன்போது பௌத்த மத ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெற்றன.

அத்தோடு வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளிச்சங்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

வெசாக் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல, சேருவில ரஜ மகா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர் .

அத்தோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சேருவில ரஜ மஹா விகாரைக்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

திருமலையில் வெசாக் வலயம் கிழக்கு ஆளுநரால் திறந்து வைப்பு. வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை சேருவில -ரஜ மஹா விகாரையில் வெசாக் பௌர்ணமி நிகழ்வுகள் நேற்றையதினம்(24) மாலை இடம்பெற்றது.இதன்போது பௌத்த மத ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெற்றன.அத்தோடு வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளிச்சங்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.வெசாக் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல, சேருவில ரஜ மகா விகாரையின் விகாராதிபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வெசாக் வலயத்தை திறந்து வைத்தனர் .அத்தோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சேருவில ரஜ மஹா விகாரைக்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement