திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள, மியான்மார் நாட்டு அகதிகளுக்கு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேற்றையதினம்(12) வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் 30 குடும்பங்களைச் சேர்ந்த,103 பேருக்கும் போதுமான, உடு துணிகள் உட்பட நாளாந்தம் பாவனைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இந்தப் பொதிகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் பிரஷான்டினி உதயகுமார், அதன் திட்ட முகாமையாளர் ஸ்டான்லி அனுஜா மற்றும் உதவி இணைப்பாளர் இந்திரராசா கலாராணி ஆகியோர் இந்த உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் நாட்டு அகதிகளுக்கு திருமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினரின் உதவிக் கரம். திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள, மியான்மார் நாட்டு அகதிகளுக்கு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேற்றையதினம்(12) வழங்கி வைக்கப்பட்டன.அந்தவகையில் 30 குடும்பங்களைச் சேர்ந்த,103 பேருக்கும் போதுமான, உடு துணிகள் உட்பட நாளாந்தம் பாவனைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இந்தப் பொதிகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன. திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் பிரஷான்டினி உதயகுமார், அதன் திட்ட முகாமையாளர் ஸ்டான்லி அனுஜா மற்றும் உதவி இணைப்பாளர் இந்திரராசா கலாராணி ஆகியோர் இந்த உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.