திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கூறி கையூட்டல் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரிடமிருந்து 5000 ரூபாவை கையூட்டல் பெற்றபோது இவர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல் ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றியவர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் உப்புவெளி பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்படவுள்ளார்.
இலஞ்சம் பெற்ற திருமலை தலைமையக பொலிஸ் பிரிவு சார்ஜன்ட் கைது திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கூறி கையூட்டல் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரிடமிருந்து 5000 ரூபாவை கையூட்டல் பெற்றபோது இவர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல் ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றியவர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் உப்புவெளி பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்படவுள்ளார்.