• Dec 15 2024

திருகோணமலையில் செய்தி சேகரிப்பதற்கு : ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

Tharmini / Dec 15th 2024, 10:15 am
image

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்குபற்றி, செய்தி சேகரிப்பதற்கு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு செய்தி சேகரிப்பதற்கு, 2021 பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட 2/2021 இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், நாடளாவிய ரீதியில், மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதன் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தடையை நீக்கிய போதும், அப்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராகவும் இருந்த ஒருவரால், தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இது சம்பந்தமாக டிசம்பர் 11ஆம் திகதி திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, புதிய அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரவுடன், அவரது திருகோணமலை அலுவலகத்தில், கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. 

இந்த சந்திப்பில், ஊடக மன்றத்தின் தலைவர் அமதுரு அமரஜீவ, பொருளாளர் எஸ். கீதபொன்கலன், அமைப்பாளர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி, நிர்வாகக் குழு உறுப்பினர் எம். எச். யூஸுப் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, இந்த தடையை நீக்கி , ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் ஒன்று, பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பயனாக, தடையை நீக்கி ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க வாய்ப்பளிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு, பிரதி அமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின்னர், தற்போது புதிய அரசாங்கத்தின் கீழ், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, செய்தி 

அறிக்கையிடுவதற்கான வாய்ப்பு மீண்டும் ஊடகவியலாளர்களுக்கு  கிடைத்துள்ளது. 

இதற்காக, பிரதி அமைச்சருக்கு,  திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அமதுரு அமரஜீவ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.



திருகோணமலையில் செய்தி சேகரிப்பதற்கு : ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்குபற்றி, செய்தி சேகரிப்பதற்கு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு செய்தி சேகரிப்பதற்கு, 2021 பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட 2/2021 இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம், நாடளாவிய ரீதியில், மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.இதன் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தடையை நீக்கிய போதும், அப்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராகவும் இருந்த ஒருவரால், தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், இது சம்பந்தமாக டிசம்பர் 11ஆம் திகதி திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, புதிய அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரவுடன், அவரது திருகோணமலை அலுவலகத்தில், கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. இந்த சந்திப்பில், ஊடக மன்றத்தின் தலைவர் அமதுரு அமரஜீவ, பொருளாளர் எஸ். கீதபொன்கலன், அமைப்பாளர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி, நிர்வாகக் குழு உறுப்பினர் எம். எச். யூஸுப் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது, இந்த தடையை நீக்கி , ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் ஒன்று, பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.இதன் பயனாக, தடையை நீக்கி ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க வாய்ப்பளிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு, பிரதி அமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின்னர், தற்போது புதிய அரசாங்கத்தின் கீழ், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, செய்தி அறிக்கையிடுவதற்கான வாய்ப்பு மீண்டும் ஊடகவியலாளர்களுக்கு  கிடைத்துள்ளது. இதற்காக, பிரதி அமைச்சருக்கு,  திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அமதுரு அமரஜீவ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement