• Nov 23 2024

இன்று திரியாய் வளத்தாமலையில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை

Tharmini / Oct 16th 2024, 4:08 pm
image

திருகோணமலை -திரியாய் வளத்தாமலைப் பகுதில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று (16) இடம்பெற்றது. குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான விசாரணை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் வளத்தாமலைப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் மற்றும் அரிசிமலை விகாராதிபதியின் தனியார் உறுதிக் காணி என கூறப்படும் 18 ஏக்கர் காணிகளை அளந்து பௌத்த பிக்குவிற்கு கையளித்து ஏனையவற்றை மக்களுடைய விவசாய நடவடிக்கு வழங்குவதாக எட்டப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த அளவீடு நடவடிக்கைகள் இன்று (16) மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த பகுதியில் சப்தநாக பப்பத வன செனசுன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கு 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகையின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகத்தின் 4/10/62767  இலக்கம் கொண்டதும், மாகாண காணி ஆணையாளரின் EP/28/LB/LES/Pooja grant அடிப்படையில் 2020.10.02 வெளியான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் 20.2342 ஹெக்டேயர் காணி வழங்கப்பட்டிருந்த காணியையும், அப்பகுதியில் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரருக்கு இருப்பதாகக்கூறும் தனியார் உறுதிக்காணி 18 ஏக்கர் காணியையும் அளவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

கடந்த செவ்வாய்க்கிழமை (15) பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், மூஸ்லீம் மக்கள் உட்பட சிங்கள மக்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பூஜா பூமி எனும் பெயரில் மக்களுடைய காணிகளை அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர்  ஆக்கிரமித்து வருவதாக தேரர் மீது குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் அவர் இனங்களுக்கிடையே முறுகல் நிலையினை தோற்றுவித்து வருவதாகவும் எனவே அவரை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூவின மக்களும் அரச அதிகாரிகளிடம் கோரிக்கையையும் முன்வைத்தனர்.


இன்று திரியாய் வளத்தாமலையில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை திருகோணமலை -திரியாய் வளத்தாமலைப் பகுதில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று (16) இடம்பெற்றது. குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான விசாரணை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வளத்தாமலைப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் மற்றும் அரிசிமலை விகாராதிபதியின் தனியார் உறுதிக் காணி என கூறப்படும் 18 ஏக்கர் காணிகளை அளந்து பௌத்த பிக்குவிற்கு கையளித்து ஏனையவற்றை மக்களுடைய விவசாய நடவடிக்கு வழங்குவதாக எட்டப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த அளவீடு நடவடிக்கைகள் இன்று (16) மேற்கொள்ளப்பட்டன.இதன்போது குறித்த பகுதியில் சப்தநாக பப்பத வன செனசுன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கு 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகையின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகத்தின் 4/10/62767  இலக்கம் கொண்டதும், மாகாண காணி ஆணையாளரின் EP/28/LB/LES/Pooja grant அடிப்படையில் 2020.10.02 வெளியான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் 20.2342 ஹெக்டேயர் காணி வழங்கப்பட்டிருந்த காணியையும், அப்பகுதியில் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரருக்கு இருப்பதாகக்கூறும் தனியார் உறுதிக்காணி 18 ஏக்கர் காணியையும் அளவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. கடந்த செவ்வாய்க்கிழமை (15) பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், மூஸ்லீம் மக்கள் உட்பட சிங்கள மக்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பூஜா பூமி எனும் பெயரில் மக்களுடைய காணிகளை அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர்  ஆக்கிரமித்து வருவதாக தேரர் மீது குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் அவர் இனங்களுக்கிடையே முறுகல் நிலையினை தோற்றுவித்து வருவதாகவும் எனவே அவரை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூவின மக்களும் அரச அதிகாரிகளிடம் கோரிக்கையையும் முன்வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement