எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது.
முன்னதாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதியும் நவம்பர் முதலாம் திகதியும் அஞ்சல் மூல வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் சகல காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், குறித்த அலுவலர்களுக்கு இன்றைய தினமும் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதலாம் திகதியும் இன்றைய தினமும் முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த 3 தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதியும் நவம்பர் முதலாம் திகதியும் அஞ்சல் மூல வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் சகல காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், குறித்த அலுவலர்களுக்கு இன்றைய தினமும் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முதலாம் திகதியும் இன்றைய தினமும் முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த 3 தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.