• Oct 30 2024

இன்று உலக உணவு தினம் : கண்டி செட்டிக் நிறுவனம் ஹட்டனில் தெளிவூட்டல் நிகழ்வு

Tharmini / Oct 16th 2024, 4:42 pm
image

Advertisement

உலக உணவு தினமான இன்று கண்டி செட்டிக் நிறுவனம் ஹட்டன் நகரில் தெளிவூட்டும் நிகழ்வு ஒற்றை நடத்தியது.நிகழ்விற்கு செட்டிக் நிறுவன தலைவர் கண்டி மறை மாவட்ட ஆயர் மில்ரொய் பொன்சேகா தலைமையில் ஹட்டன் சென் பொஸ்கோ கிறித்தவ தேவாலய கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அதிதிகள் வரவேற்பு நிகழ்வு டன் மத அனுஷ்டானம் அமைதி வழிபாடு உணவு வேலை திட்ட வழிபாடு என்பன வற்றுடன் பாடசாலை மாணவியர்களின் கட்டிய,பரத, நாட்டியம் இடம் பெற்றது.

தொடர்ந்து நாட்டின் மக்கள் தேவைக்கு நச்சு தன்மை இல்லாத உணவுகள் எவ்வாறு பெற்று கொள்வது பற்றிய விரிவான விளக்கம் செட்டிக் நிறுவன அதிகாரி திருமதி.நிலானிதிரேசா அவரது விரிவான உரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து செட்டிக் நிறுவன தலைவர் கண்டி மறை மாவட்ட ஆயர் மில்ரொய் பொன்சேகா பேசுகையில் எமது செட்டிக் நிறுவனம் இலங்கையில் சகல மாவட்டங்களிலும் பணியாற்றி வருகிறது.இந்த நாட்டில் வாழும் 2 கோடிக்கும் மேலான மக்கள் அன்றாடம் மூன்று வேளை உணவில் நச்சு தன்மை கொண்ட உணர்வையே உட்கொள்கின்றனர்.நமது நாட்டு மக்கள் தமக்கென ஒரு வீட்டு தோட்டத்தை அமைத்து கொண்டால் சேதன பசளையை பயன் படுத்தி நச்சு தன்மை இல்லாத மரக்கறி வகைகள் பழங்கள் போன்ற வற்றை பெற்று கொள்ள முடியும்.இதனால் மாதாந்தம் பண சேமிப்பையும் ஏற்படுத்தி கொள்ள முடியும் எனவும் காணி வசதி இருக்கும் பட்சத்தில் கோழி,ஆடு, மாடு போன்ற வீட்டு பண்ணைகளை ஏற்படுத்தி கொண்டால் இயற்கையான முறையில் சேதன பசளையை பெற்று கொள்ள முடியும்.

அத்துடன் முட்டை,இரைச்சி, பால் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ள முடியும்.எமது செட்டிக் நிறுவனம் இந்த வேலை திட்டத்திற்கான வழி காட்டல்களை மேற் கொண்டு வருகிறது. நுவரெலியா மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் எமது செட்டிக் நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாக பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.


இன்று உலக உணவு தினம் : கண்டி செட்டிக் நிறுவனம் ஹட்டனில் தெளிவூட்டல் நிகழ்வு உலக உணவு தினமான இன்று கண்டி செட்டிக் நிறுவனம் ஹட்டன் நகரில் தெளிவூட்டும் நிகழ்வு ஒற்றை நடத்தியது.நிகழ்விற்கு செட்டிக் நிறுவன தலைவர் கண்டி மறை மாவட்ட ஆயர் மில்ரொய் பொன்சேகா தலைமையில் ஹட்டன் சென் பொஸ்கோ கிறித்தவ தேவாலய கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு அதிதிகள் வரவேற்பு நிகழ்வு டன் மத அனுஷ்டானம் அமைதி வழிபாடு உணவு வேலை திட்ட வழிபாடு என்பன வற்றுடன் பாடசாலை மாணவியர்களின் கட்டிய,பரத, நாட்டியம் இடம் பெற்றது.தொடர்ந்து நாட்டின் மக்கள் தேவைக்கு நச்சு தன்மை இல்லாத உணவுகள் எவ்வாறு பெற்று கொள்வது பற்றிய விரிவான விளக்கம் செட்டிக் நிறுவன அதிகாரி திருமதி.நிலானிதிரேசா அவரது விரிவான உரையில் தெரிவித்தார்.தொடர்ந்து செட்டிக் நிறுவன தலைவர் கண்டி மறை மாவட்ட ஆயர் மில்ரொய் பொன்சேகா பேசுகையில் எமது செட்டிக் நிறுவனம் இலங்கையில் சகல மாவட்டங்களிலும் பணியாற்றி வருகிறது.இந்த நாட்டில் வாழும் 2 கோடிக்கும் மேலான மக்கள் அன்றாடம் மூன்று வேளை உணவில் நச்சு தன்மை கொண்ட உணர்வையே உட்கொள்கின்றனர்.நமது நாட்டு மக்கள் தமக்கென ஒரு வீட்டு தோட்டத்தை அமைத்து கொண்டால் சேதன பசளையை பயன் படுத்தி நச்சு தன்மை இல்லாத மரக்கறி வகைகள் பழங்கள் போன்ற வற்றை பெற்று கொள்ள முடியும்.இதனால் மாதாந்தம் பண சேமிப்பையும் ஏற்படுத்தி கொள்ள முடியும் எனவும் காணி வசதி இருக்கும் பட்சத்தில் கோழி,ஆடு, மாடு போன்ற வீட்டு பண்ணைகளை ஏற்படுத்தி கொண்டால் இயற்கையான முறையில் சேதன பசளையை பெற்று கொள்ள முடியும்.அத்துடன் முட்டை,இரைச்சி, பால் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ள முடியும்.எமது செட்டிக் நிறுவனம் இந்த வேலை திட்டத்திற்கான வழி காட்டல்களை மேற் கொண்டு வருகிறது. நுவரெலியா மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் எமது செட்டிக் நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாக பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement