• Jun 01 2025

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம்

Thansita / May 31st 2025, 12:43 pm
image

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

 அத்துடன் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் மறை 2 சதவீதமாக நிலவிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் மறை 0.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

 அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 1.3 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதத்தில் 5.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. 

 அத்துடன், ஏப்ரல் மாதத்தில் மறை 3.6 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் மே மாதத்தில் மறை 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அத்துடன் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் மறை 2 சதவீதமாக நிலவிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் மறை 0.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.  அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 1.3 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதத்தில் 5.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.  அத்துடன், ஏப்ரல் மாதத்தில் மறை 3.6 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் மே மாதத்தில் மறை 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement