• Nov 24 2024

தேசிய வீரர்களின் தியாகங்களுடன் வென்றெடுத்த சுதந்திரத்தையே நாம் இன்று அனுபவிக்கின்றோம்...! பிரதமர் தெரிவிப்பு...!

Sharmi / Feb 14th 2024, 11:44 am
image

எமது தேசத்தின் அடையாளம். டி. பி. ஜயதிலக்க நாட்டின் சுதந்திரப் போராட்ட நாயகனாக உருவாக்கிய அந்த அடித்தளத்தை நாம் பாதுகாப்போம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

களனி வராகொடவில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற தேசிய வீரர் சேர் டி. பி. ஜயதிலகவின் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய வீரர் சேர் டொன் பாரோன் ஜயதிலக்கவின் 156 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது பிறந்த இடமான களனி வராகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உருவச் சிலை பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

எமது நாட்டின் சிறப்புமிக்க தேசிய வீரராக விளங்கிய டி.பி.ஜயதிலக அவர்களின் சொந்த கிராமத்தில் அவரது உருவச்சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்வில் பிரதமர் என்ற வகையில் நான் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தேசத்தின் இருப்புக்கு மொழி, கலாசாரம், சமயப் பற்று போன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நித்திய படைப்புகள் பங்களிக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து முன்கொண்டு செல்வதில் தான் தேசத்தின் இருப்பு தங்கியுள்ளது. டி.பி. ஜயதிலக்க அவர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு அவ்வாறான வழிகாட்டுதலை வழங்கிய இணையற்ற தேசிய வீரர்.

சிங்கள மொழிக்கும், கலாசாரத்திற்கும், பௌத்தத்திற்கும் விலைமதிக்க முடியாத சேவையாற்றினார். அதனை தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் ஒன்றாக மாற்ற அவர் உழைத்தார். எமது வித்யாலங்கார பிரிவேனாவை அதன் ஆரம்பம் முதல் வழிநடத்திய மகாசங்கத்தினருக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசத்துடனும் தனது பங்களிப்பை நல்கியவர். டி.பி. ஜயதிலக்க அவர்கள் தனது அறிவை வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி தனது அறிவை இன்னொரு தலைமுறைக்குக் கடத்தும் மிகப்பெரும் நற்பணிக்கு முன்னோடியாக இருந்தார்.

குறிப்பாக இலங்கையில் பௌத்த கல்வி மறுமலர்ச்சியினை பொறுப்பேற்று பௌத்தக் கல்லூரிகளின் தொடர்ச்சியை பேணுவதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார். கொழும்பில் ஆனந்தா கல்லூரி, கண்டியில் உள்ள தர்மராஜ கல்லூரி மற்றும் பல கல்லூரிகளின் தொடர்ச்சியான இருப்புக்கு தேவையான திட்டத்தை தயாரித்தார்.

சுதந்திரப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராக விளங்கினார். இவரது முயற்சியில் பல பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் கட்டிடங்கள் இருக்கவில்லை. எங்கள் கிராமத் தலைவர்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில், கம்புகளால் கட்டப்பட்ட கொட்டகைகளிலும், தென்னை ஓலைகளிலான கூரைகளின் கீழுமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பௌத்தக் கல்வி அவ்வாறு கட்டியெழுப்பப்பட்டதால், எமது நாட்டை பெரும் முன்னேற்றத்தை நோக்கி கொண்டுசெல்லும் கல்விமான்கள் உருவாகினர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவற்றுக்காக அவர் அளித்த வழிகாட்டலும் அர்ப்பணிப்பும் தனித்துவமானது.

இன்றும் காணி உறுதி இல்லாதவர்கள் உள்ளனர். இலங்கையில் எந்த பாராளுமன்ற காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டது? இந்த மாபெரும் தியாகத்தை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டின் எதிர்காலத் தலைவர்களைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கையின் கிராமத் தலைவர்கள் அந்தத் தியாகங்களைச் செய்தனர். நாட்டின் இருப்புக்காகவும், சாசனத்தின் இருப்புக்காகவும் அதனை செய்தனர்.

டி.பி.ஜயதிலக்க அவர்கள் சிங்கள மொழி, சமஸ்கிரத மொழி உட்பட பல மொழிகளில் அற்புதமான திறமையைக் கொண்டிருந்தார் என்பதை நாம் கேள்விப்பட்டு படித்திருக்கிறோம். அதை நாங்கள் மதிக்கிறோம்.

இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன் அவர்கள் வித்தியாலயங்கரைக்கு வருகை தந்த போது யக்கடுவே பஞ்சாராம நாயக்க தேரரிடம் சமஸ்கிரத மொழியில் பேசியதாக கேள்விப்பட்டுள்ளோம். அதற்கான பின்னணியை அவர் வித்யாலயங்காரவிலிருந்து பெற்றார். இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் வித்யாலயங்காரவின் வரலாற்றிலும் அழியாது தடம்பதிக்கும். இவ்வாறானதொரு நிலைக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு டி.பி.ஜயதிலக அவர்களின் படைப்பாற்றலையும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

ருவன்வெலி மகா சாய சைத்தியராஜ பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அதனை திரைநீக்கம் செய்வதற்கான வாய்ப்பு டி.பி. ஜயதிலக அவர்களுக்கே கிடைத்தது. மக்களும் மகாசங்கத்தினரும் அவரை அன்று நாட்டின் அரசராகக் கருதினர். எமது நாட்டினதும் கலாசாரத்தினதும் தொடர்ச்சியான இருப்புக்கும் முதுகெலும்பாக விளங்கிய பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்கக்கூடிய புகழ்பெற்ற தலைமைத்துவத்தை அவர் பெற்றிருந்தார்.

நாட்டின் பிரதமர் என்ற வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, எனது அன்புக்குரிய தந்தையுடன் அவர் கொண்டிருந்த உறவின் காரணமாக டி.பி.ஜயதிலக்கவின் உருவச்சிலைக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன்.

எமது நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரச பேரவையில் அவர் வழங்கிய வழிகாட்டுதல் இன்றும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் ஆராய்ச்சியை கைவிடக்கூடாது. டி.பி. ஜயதிலக்க பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இலங்கையின் அடையாளத்தை ஆராய்வதோடு, எமது நாட்டின் மொழி, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் இருப்புக்கான முக்கிய ஆராய்ச்சியாக அமையும். இதற்காக அமைச்சரவைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிப்பதாக அரசாங்கத்தின் சார்பில் உறுதியளிக்கின்றோம்.

நாம் அனைத்தையுமே இழந்துவிட்ட ஒரு தேசத்தினர் அல்ல. நாம் பசியுடன் இருந்தாலும், எங்கள் மொழியை நாங்கள் கைவிடவில்லை. நாங்கள் எங்கள் கலாச்சாரத்தை கைவிடவில்லை. எமது மொழியும் பண்பாடும் தான் எமது தேசத்தின் அடையாளம். டி. பி. ஜயதிலக்க நாட்டின் சுதந்திரப் போராட்ட நாயகனாக உருவாக்கிய அந்த அடித்தளத்தை நாம் பாதுகாப்போம்.

இன்று நாம் உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து வாழ்கிறோம். இதற்கு அன்று அரச உறவுகளை வலுப்படுத்துவதற்கு டி.பி.ஜயதிலக்கவின் வழிகாட்டுதலே காரணம். அந்த உன்னத ஆளுமையை பின்பற்றவும் புரிந்துகொள்ளவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, யதாமினி குணவர்தன ஆகியோர் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.  இந்த நிகழ்வில்  பேலியகொட வித்யாலங்கார பிரிவெனாதிபதி, சபரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சங்கைக்குரிய கம்புருகமுவ வஜிர தேரர், சங்கைக்குரிய கீர்த்தி ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் வைத்தியர் ஹாரித ஜய திலக உள்ளிட்ட சேர் டி.பி.ஜயதிலக்கவின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தேசிய வீரர்களின் தியாகங்களுடன் வென்றெடுத்த சுதந்திரத்தையே நாம் இன்று அனுபவிக்கின்றோம். பிரதமர் தெரிவிப்பு. எமது தேசத்தின் அடையாளம். டி. பி. ஜயதிலக்க நாட்டின் சுதந்திரப் போராட்ட நாயகனாக உருவாக்கிய அந்த அடித்தளத்தை நாம் பாதுகாப்போம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.களனி வராகொடவில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற தேசிய வீரர் சேர் டி. பி. ஜயதிலகவின் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.தேசிய வீரர் சேர் டொன் பாரோன் ஜயதிலக்கவின் 156 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது பிறந்த இடமான களனி வராகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உருவச் சிலை பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,எமது நாட்டின் சிறப்புமிக்க தேசிய வீரராக விளங்கிய டி.பி.ஜயதிலக அவர்களின் சொந்த கிராமத்தில் அவரது உருவச்சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்வில் பிரதமர் என்ற வகையில் நான் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தேசத்தின் இருப்புக்கு மொழி, கலாசாரம், சமயப் பற்று போன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நித்திய படைப்புகள் பங்களிக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து முன்கொண்டு செல்வதில் தான் தேசத்தின் இருப்பு தங்கியுள்ளது. டி.பி. ஜயதிலக்க அவர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு அவ்வாறான வழிகாட்டுதலை வழங்கிய இணையற்ற தேசிய வீரர்.சிங்கள மொழிக்கும், கலாசாரத்திற்கும், பௌத்தத்திற்கும் விலைமதிக்க முடியாத சேவையாற்றினார். அதனை தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் ஒன்றாக மாற்ற அவர் உழைத்தார். எமது வித்யாலங்கார பிரிவேனாவை அதன் ஆரம்பம் முதல் வழிநடத்திய மகாசங்கத்தினருக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசத்துடனும் தனது பங்களிப்பை நல்கியவர். டி.பி. ஜயதிலக்க அவர்கள் தனது அறிவை வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி தனது அறிவை இன்னொரு தலைமுறைக்குக் கடத்தும் மிகப்பெரும் நற்பணிக்கு முன்னோடியாக இருந்தார்.குறிப்பாக இலங்கையில் பௌத்த கல்வி மறுமலர்ச்சியினை பொறுப்பேற்று பௌத்தக் கல்லூரிகளின் தொடர்ச்சியை பேணுவதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார். கொழும்பில் ஆனந்தா கல்லூரி, கண்டியில் உள்ள தர்மராஜ கல்லூரி மற்றும் பல கல்லூரிகளின் தொடர்ச்சியான இருப்புக்கு தேவையான திட்டத்தை தயாரித்தார்.சுதந்திரப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராக விளங்கினார். இவரது முயற்சியில் பல பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் கட்டிடங்கள் இருக்கவில்லை. எங்கள் கிராமத் தலைவர்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில், கம்புகளால் கட்டப்பட்ட கொட்டகைகளிலும், தென்னை ஓலைகளிலான கூரைகளின் கீழுமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பௌத்தக் கல்வி அவ்வாறு கட்டியெழுப்பப்பட்டதால், எமது நாட்டை பெரும் முன்னேற்றத்தை நோக்கி கொண்டுசெல்லும் கல்விமான்கள் உருவாகினர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவற்றுக்காக அவர் அளித்த வழிகாட்டலும் அர்ப்பணிப்பும் தனித்துவமானது.இன்றும் காணி உறுதி இல்லாதவர்கள் உள்ளனர். இலங்கையில் எந்த பாராளுமன்ற காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டது இந்த மாபெரும் தியாகத்தை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டின் எதிர்காலத் தலைவர்களைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கையின் கிராமத் தலைவர்கள் அந்தத் தியாகங்களைச் செய்தனர். நாட்டின் இருப்புக்காகவும், சாசனத்தின் இருப்புக்காகவும் அதனை செய்தனர்.டி.பி.ஜயதிலக்க அவர்கள் சிங்கள மொழி, சமஸ்கிரத மொழி உட்பட பல மொழிகளில் அற்புதமான திறமையைக் கொண்டிருந்தார் என்பதை நாம் கேள்விப்பட்டு படித்திருக்கிறோம். அதை நாங்கள் மதிக்கிறோம்.இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன் அவர்கள் வித்தியாலயங்கரைக்கு வருகை தந்த போது யக்கடுவே பஞ்சாராம நாயக்க தேரரிடம் சமஸ்கிரத மொழியில் பேசியதாக கேள்விப்பட்டுள்ளோம். அதற்கான பின்னணியை அவர் வித்யாலயங்காரவிலிருந்து பெற்றார். இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் வித்யாலயங்காரவின் வரலாற்றிலும் அழியாது தடம்பதிக்கும். இவ்வாறானதொரு நிலைக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு டி.பி.ஜயதிலக அவர்களின் படைப்பாற்றலையும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.ருவன்வெலி மகா சாய சைத்தியராஜ பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அதனை திரைநீக்கம் செய்வதற்கான வாய்ப்பு டி.பி. ஜயதிலக அவர்களுக்கே கிடைத்தது. மக்களும் மகாசங்கத்தினரும் அவரை அன்று நாட்டின் அரசராகக் கருதினர். எமது நாட்டினதும் கலாசாரத்தினதும் தொடர்ச்சியான இருப்புக்கும் முதுகெலும்பாக விளங்கிய பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்கக்கூடிய புகழ்பெற்ற தலைமைத்துவத்தை அவர் பெற்றிருந்தார்.நாட்டின் பிரதமர் என்ற வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, எனது அன்புக்குரிய தந்தையுடன் அவர் கொண்டிருந்த உறவின் காரணமாக டி.பி.ஜயதிலக்கவின் உருவச்சிலைக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன்.எமது நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரச பேரவையில் அவர் வழங்கிய வழிகாட்டுதல் இன்றும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். நாம் ஆராய்ச்சியை கைவிடக்கூடாது. டி.பி. ஜயதிலக்க பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இலங்கையின் அடையாளத்தை ஆராய்வதோடு, எமது நாட்டின் மொழி, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் இருப்புக்கான முக்கிய ஆராய்ச்சியாக அமையும். இதற்காக அமைச்சரவைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிப்பதாக அரசாங்கத்தின் சார்பில் உறுதியளிக்கின்றோம்.நாம் அனைத்தையுமே இழந்துவிட்ட ஒரு தேசத்தினர் அல்ல. நாம் பசியுடன் இருந்தாலும், எங்கள் மொழியை நாங்கள் கைவிடவில்லை. நாங்கள் எங்கள் கலாச்சாரத்தை கைவிடவில்லை. எமது மொழியும் பண்பாடும் தான் எமது தேசத்தின் அடையாளம். டி. பி. ஜயதிலக்க நாட்டின் சுதந்திரப் போராட்ட நாயகனாக உருவாக்கிய அந்த அடித்தளத்தை நாம் பாதுகாப்போம்.இன்று நாம் உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து வாழ்கிறோம். இதற்கு அன்று அரச உறவுகளை வலுப்படுத்துவதற்கு டி.பி.ஜயதிலக்கவின் வழிகாட்டுதலே காரணம். அந்த உன்னத ஆளுமையை பின்பற்றவும் புரிந்துகொள்ளவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, யதாமினி குணவர்தன ஆகியோர் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.  இந்த நிகழ்வில்  பேலியகொட வித்யாலங்கார பிரிவெனாதிபதி, சபரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சங்கைக்குரிய கம்புருகமுவ வஜிர தேரர், சங்கைக்குரிய கீர்த்தி ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் வைத்தியர் ஹாரித ஜய திலக உள்ளிட்ட சேர் டி.பி.ஜயதிலக்கவின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement