வெற்றிலையை பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார்.
வெற்றிலையைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது.
மேலும் வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், மற்றும் வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு, சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், புகையிலைக்கு பதிலாக அதிக சர்க்கரை மற்றும் உணவு வண்ணம் சேர்க்கப்படுகிறது.
வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்க முடியும் என்றும், வெற்றிலையில் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இந்த இனிப்பை பயன்படுத்துவதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
குறைந்த நேரத்தில் குறைந்தளவிலான பொருட்களைப் பயன்படுத்தி இதனைத் தயாரிக்க முடியும் என்பதால் எவரும் சுயதொழிலாக இதனைச் செய்ய முடியும் எனவும் அதில் ஆர்வம் இருந்தால் தேவையான அறிவையும் பயிற்சியையும் தமது நிறுவனத்தின் மூலம் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெற்றிலையில் இருந்து டொஃபி. இலங்கையில் புதிய கண்டுபிடிப்பு samugammedia வெற்றிலையை பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார்.வெற்றிலையைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது.மேலும் வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், மற்றும் வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு, சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.இதில், புகையிலைக்கு பதிலாக அதிக சர்க்கரை மற்றும் உணவு வண்ணம் சேர்க்கப்படுகிறது.வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்க முடியும் என்றும், வெற்றிலையில் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இந்த இனிப்பை பயன்படுத்துவதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.குறைந்த நேரத்தில் குறைந்தளவிலான பொருட்களைப் பயன்படுத்தி இதனைத் தயாரிக்க முடியும் என்பதால் எவரும் சுயதொழிலாக இதனைச் செய்ய முடியும் எனவும் அதில் ஆர்வம் இருந்தால் தேவையான அறிவையும் பயிற்சியையும் தமது நிறுவனத்தின் மூலம் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.