• May 04 2024

நாளை 12 மணித்தியால நீர்வெட்டு..! வெளியான அறிவிப்பு

Chithra / Apr 23rd 2024, 1:51 pm
image

Advertisement

  

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர, தொம்பே ஆகிய இடங்களிலும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், தேவையன நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை 12 மணித்தியால நீர்வெட்டு. வெளியான அறிவிப்பு   கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர, தொம்பே ஆகிய இடங்களிலும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், தேவையன நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement