• Nov 26 2024

கனடா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையாகும் சட்டங்கள்..!! Samugammedia

Tamil nila / Dec 31st 2023, 7:14 pm
image

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்தாண்டில் கனடாவுக்குள் நுழையும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் பெருமளவிலான வருகையை நிவர்த்தி செய்வதற்கான சீர்திருத்தங்களை வெளியிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கனடாவின் வீட்டு நெருக்கடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பெருமளவிலான வருகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் மில்லர் மறைமுகமாக கூறியுள்ளார்.

தற்காலிக பணியாளர்கள் அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு பணிக்கான அனுமதியைப் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் போன்ற பல்வேறு வழிகளில் கனடாவில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடா தற்போது 40.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் 313,000 பேர் குடியேறியவர்கள் ஆகும் என அமைச்சர் மார்க் மில்லர் மேலும் தெரிவித்தார்.


கனடா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையாகும் சட்டங்கள். Samugammedia கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அடுத்தாண்டில் கனடாவுக்குள் நுழையும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் பெருமளவிலான வருகையை நிவர்த்தி செய்வதற்கான சீர்திருத்தங்களை வெளியிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.கனடாவின் வீட்டு நெருக்கடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பெருமளவிலான வருகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் மில்லர் மறைமுகமாக கூறியுள்ளார்.தற்காலிக பணியாளர்கள் அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு பணிக்கான அனுமதியைப் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் போன்ற பல்வேறு வழிகளில் கனடாவில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.கனடா தற்போது 40.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் 313,000 பேர் குடியேறியவர்கள் ஆகும் என அமைச்சர் மார்க் மில்லர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement