அருணாச்சல் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள சேலா ஏரியின்உறைந்த நீரில் தவறி விழுந்ததில்கேரளாவைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி மூழ்கி உயிரிழந்துடன்மற்றொரு பயணி காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய டினு மற்றும் காணாமல் போனவர்24 வயதுடைய மகாதேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்தநபர்கள் குவஹாத்தி வழியாக வந்த ஏழு பேர் கொண்ட சுற்றுலா குழுவைச் சேர்ந்தவர்கள்.
சுற்றுலாப் பயணிகள் உறைந்த ஏரியில் காலடி வைக்கும்போது பனிக்கட்டி விரிசலடைவதால் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஏரியில் ஒருவர் மூழ்கத் தொடங்கியபோது, டினு மற்றும் மகாதேவ் அவரை மீட்க முயன்றனர், ஆனால் இருவரும் பனிக்கட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மூன்றாவது பயணி பாதுகாப்பாக வெளியேறியுள்ளார்.
பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்தியப் படைகள் இணைந்து மீட்பு நடவடிக்கையைமேற்கொண்டனர்.
சேலா ஏரி மற்றும் சுற்றுலா தலங்களில் பலகைகள் நிறுவப்பட்டு, உறைந்த நீரில் நடப்பது அல்லது காலடி வைக்கவேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறை பனி ஏரியில் சிக்கி உயிரிழந்த சுற்றுலாப் பயணி அருணாச்சல் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள சேலா ஏரியின் உறைந்த நீரில் தவறி விழுந்ததில் கேரளாவைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி மூழ்கி உயிரிழந்துடன் மற்றொரு பயணி காணாமல் போயுள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய டினு மற்றும் காணாமல் போனவர் 24 வயதுடைய மகாதேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் குவஹாத்தி வழியாக வந்த ஏழு பேர் கொண்ட சுற்றுலா குழுவைச் சேர்ந்தவர்கள்.சுற்றுலாப் பயணிகள் உறைந்த ஏரியில் காலடி வைக்கும் போது பனிக்கட்டி விரிசலடைவதால் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஏரியில் ஒருவர் மூழ்கத் தொடங்கிய போது, டினு மற்றும் மகாதேவ் அவரை மீட்க முயன்றனர், ஆனால் இருவரும் பனிக்கட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மூன்றாவது பயணி பாதுகாப்பாக வெளியேறியுள்ளார். பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்தியப் படைகள் இணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.சேலா ஏரி மற்றும் சுற்றுலா தலங்களில் பலகைகள் நிறுவப்பட்டு, உறைந்த நீரில் நடப்பது அல்லது காலடி வைக்கவேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.