• Nov 17 2024

மனித வலுவினை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் நெல் அறுவடை

Anaath / Aug 25th 2024, 6:11 pm
image

கிளிநொச்சி - விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும்  வட்டக்கச்சி வயல் செயற்திட்டத்தின் கீழ் பாரம்பரிய முறையில் நெல் அறுவடை இன்றையதினம் (25) மிகவும் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.

குறித்த செயற்திட்டத்தின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில்  பெரும்போகம், சிறுபோகம் என  இரு போகங்களாக நெற் பயிர் பயிரிடப்பட்டு வருவதுடன் இங்கு 100 பணியாளர்கள்  பணிபுரிந்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்றையதினம் சிறுபோக  அறுவடை பாரம்பரிய முறைப்படி இடம்பெற்று அதிக மனித வலுக்களை  பயன்படுத்தி குறைந்த  செலவில் அறுவடை இடம்பெற்றிருந்தது.

வட்டக்கச்சி வயற் செயற்திட்டத்தில் இனி வரும் காலங்களில் அதிகளவான விளைச்சலை பெற்று வருமானத்தை  அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தனர்.

தற்பொழுது உலகமானது நவீனமயமாக்கப்பட்ட நிலையிலையே இயங்கி வருகின்றது. இந்நிலையில்  முல்லைத்தீவு விசுவமடு சிவில் பாதுகாப்பு  திணைக்கள  கட்டளை பணியகத்தின்  கீழ் இயங்கிவரும்  வட்டக்கச்சி விவசாய பண்ணையில்  பாரம்பரிய முறைப்படி நெற்பயிர் கையால் அறுவடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித வலுவினை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் நெல் அறுவடை கிளிநொச்சி - விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும்  வட்டக்கச்சி வயல் செயற்திட்டத்தின் கீழ் பாரம்பரிய முறையில் நெல் அறுவடை இன்றையதினம் (25) மிகவும் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.குறித்த செயற்திட்டத்தின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில்  பெரும்போகம், சிறுபோகம் என  இரு போகங்களாக நெற் பயிர் பயிரிடப்பட்டு வருவதுடன் இங்கு 100 பணியாளர்கள்  பணிபுரிந்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்றையதினம் சிறுபோக  அறுவடை பாரம்பரிய முறைப்படி இடம்பெற்று அதிக மனித வலுக்களை  பயன்படுத்தி குறைந்த  செலவில் அறுவடை இடம்பெற்றிருந்தது.வட்டக்கச்சி வயற் செயற்திட்டத்தில் இனி வரும் காலங்களில் அதிகளவான விளைச்சலை பெற்று வருமானத்தை  அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தனர்.தற்பொழுது உலகமானது நவீனமயமாக்கப்பட்ட நிலையிலையே இயங்கி வருகின்றது. இந்நிலையில்  முல்லைத்தீவு விசுவமடு சிவில் பாதுகாப்பு  திணைக்கள  கட்டளை பணியகத்தின்  கீழ் இயங்கிவரும்  வட்டக்கச்சி விவசாய பண்ணையில்  பாரம்பரிய முறைப்படி நெற்பயிர் கையால் அறுவடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement