மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலகம பிரதேசத்தில் ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் தனது 03 நண்பர்களுடன் இணைந்து ஹுலங்கல மலையை பார்வையிட சென்றுள்ளார்.
இதன்போது இந்த இளைஞன் ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹுலங்கல மலையை பார்வையிட சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலகம பிரதேசத்தில் ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.கொழும்பு - 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த இளைஞன் தனது 03 நண்பர்களுடன் இணைந்து ஹுலங்கல மலையை பார்வையிட சென்றுள்ளார்.இதன்போது இந்த இளைஞன் ஹுலங்கல மலையிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.