மெக்ஸிகோவில் தேவாலயமொன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகி ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மெக்ஸிகோவில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற ஞாயிறு ஆராதனையின் போது தேவாலயத்தின் மேற்கூரை திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் இவ் அனர்த்தத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து நிகழும் போது தேவாலயத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக டமௌலிபாஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் மோப்ப நாய்களுடன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையினை மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையின் போது விபரீதம். 9பேர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia மெக்ஸிகோவில் தேவாலயமொன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகி ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடக்கு மெக்ஸிகோவில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற ஞாயிறு ஆராதனையின் போது தேவாலயத்தின் மேற்கூரை திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.இந்நிலையில் இவ் அனர்த்தத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்து நிகழும் போது தேவாலயத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக டமௌலிபாஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.எவ்வாறெனினும் மோப்ப நாய்களுடன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையினை மீட்பு பணியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.