யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்திரநாதன் கோபிராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாரின் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.
அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து, கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார்.
கோழி வளர்ப்பு கொலையில் நிறைவேறிய சோகம் - யாழில் கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்திரநாதன் கோபிராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாரின் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன.இந்நிலையில் நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து, கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார்.