• Nov 19 2024

பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம் - இரண்டு கால்களும் துண்டிப்பு

Tharun / Jun 9th 2024, 5:32 pm
image

பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று (8) பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இவர் பதுளை நகரில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​பண்டாரவளை டிப்போவிற்கு சொந்தமான  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை நகரை வந்தடைந்த பேருந்து பதுளை பிரதான பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் பிரவேசித்த போது பேருந்தின் முன் இடது சக்கரத்தில் அவர் சிக்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் அவரை பெரும் பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.பின்னர் அவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, பேருந்தில் மோதுண்டு பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவரது கால்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், இரண்டு கால்களும் உடலில் இருந்து விலகி தொங்கியதாகவும் கூறினார்.


பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய நபருக்கு ஏற்பட்ட துயரம் - இரண்டு கால்களும் துண்டிப்பு பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று (8) பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.இவர் பதுளை நகரில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​பண்டாரவளை டிப்போவிற்கு சொந்தமான  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.பதுளை நகரை வந்தடைந்த பேருந்து பதுளை பிரதான பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் பிரவேசித்த போது பேருந்தின் முன் இடது சக்கரத்தில் அவர் சிக்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் அவரை பெரும் பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.பின்னர் அவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, பேருந்தில் மோதுண்டு பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவரது கால்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், இரண்டு கால்களும் உடலில் இருந்து விலகி தொங்கியதாகவும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement