• May 18 2024

கொள்கலன் மோதி ரயில் விபத்து - சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 9th 2023, 8:47 am
image

Advertisement

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த பகுதியில் கொள்கலன் ஒன்று இன்று காலை புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மீரிகம – வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று ரயிலுடன் மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது ,கொள்கலன் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘பௌஃபி கர்லயால’ புகையிரதத்துடன் மோதியுள்ளது.

இதனால் வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது,

இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


கொழும்பில் இருந்து பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது. இதனால் கொழும்பு - கண்டி பாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரத்திலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்ஓவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு - கண்டி பாதையில் பிரவேசிக்கலாம்.

மீரிகம அதிவேக வீதியில் இருந்து புறப்பட்டு கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹந்தாமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்கலன் மோதி ரயில் விபத்து - சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு samugammedia மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த பகுதியில் கொள்கலன் ஒன்று இன்று காலை புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.மீரிகம – வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று ரயிலுடன் மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த விபத்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது ,கொள்கலன் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘பௌஃபி கர்லயால’ புகையிரதத்துடன் மோதியுள்ளது.இதனால் வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது,இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.கொழும்பில் இருந்து பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது. இதனால் கொழும்பு - கண்டி பாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரத்திலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்ஓவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு - கண்டி பாதையில் பிரவேசிக்கலாம்.மீரிகம அதிவேக வீதியில் இருந்து புறப்பட்டு கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹந்தாமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு - குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement