• Jan 16 2026

இரண்டு மாதங்களாக நடுக்காட்டில் சிக்கியுள்ள ரயில்: டிட்வா பாதிப்பால் சோகம்

Chithra / Jan 14th 2026, 7:51 pm
image

 

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் தண்டவாளப் பாதிப்புகள் காரணமாக, ரயில் ஒன்று சுமார் இரண்டு மாதங்களாக உலப்பனை மற்றும் கம்பளை ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் 2:07 மணிக்கு கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் புறப்பட்ட 1153 ஆம் இலக்க ரயில் இந்தப் பாதிப்புக்கு உள்ளானது. 

கம்பளை மற்றும் உலப்பனைக்கு இடைப்பட்ட வாரக்காபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு இடங்களில் தண்டவாளங்கள் சரிந்து விழுந்துள்ளன. 

மண்சரிவைக் கண்ட ரயில் சாரதி, ரயிலை பின்னோக்கி நகர்த்த முயன்றபோது, கம்பளைப் பகுதியிலும் தண்டவாளம் வளைந்திருப்பதைக் கவனித்தார். 

இதனால் விபத்தைத் தவிர்க்கும் நோக்கில், ரயிலை பாதுகாப்பான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கினார். 

பெரும் அனர்த்தம் ஏற்படவிருந்த நிலையில், சாரதியின் சமயோசித முயற்சி மற்றும் அப்பகுதி குறித்த அவரது அனுபவ அறிவு காரணமாகப் பயணிகள் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர் என வாரக்காபிட்டிய மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதால், அன்றாடத் தேவைகளுக்காகவும் கல்விக்காகவும் ரயிலை நம்பியிருந்த கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  

சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னரே சாரதி உள்ளிட்ட ஊழியர்கள் நாவலப்பிட்டி  ரயில் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். 

எனினும், சேதமடைந்த தண்டவாளங்கள் இன்னும் சீரமைக்கப்படாததால், அந்த  ரயில் சுமார் இரண்டு மாதங்களாக அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட தண்டவாளத்தை உடனடியாகச் சீரமைத்து, போக்குவரத்துச் சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு மாதங்களாக நடுக்காட்டில் சிக்கியுள்ள ரயில்: டிட்வா பாதிப்பால் சோகம்  கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் தண்டவாளப் பாதிப்புகள் காரணமாக, ரயில் ஒன்று சுமார் இரண்டு மாதங்களாக உலப்பனை மற்றும் கம்பளை ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் 2:07 மணிக்கு கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் புறப்பட்ட 1153 ஆம் இலக்க ரயில் இந்தப் பாதிப்புக்கு உள்ளானது. கம்பளை மற்றும் உலப்பனைக்கு இடைப்பட்ட வாரக்காபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு இடங்களில் தண்டவாளங்கள் சரிந்து விழுந்துள்ளன. மண்சரிவைக் கண்ட ரயில் சாரதி, ரயிலை பின்னோக்கி நகர்த்த முயன்றபோது, கம்பளைப் பகுதியிலும் தண்டவாளம் வளைந்திருப்பதைக் கவனித்தார். இதனால் விபத்தைத் தவிர்க்கும் நோக்கில், ரயிலை பாதுகாப்பான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கினார். பெரும் அனர்த்தம் ஏற்படவிருந்த நிலையில், சாரதியின் சமயோசித முயற்சி மற்றும் அப்பகுதி குறித்த அவரது அனுபவ அறிவு காரணமாகப் பயணிகள் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர் என வாரக்காபிட்டிய மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதால், அன்றாடத் தேவைகளுக்காகவும் கல்விக்காகவும் ரயிலை நம்பியிருந்த கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னரே சாரதி உள்ளிட்ட ஊழியர்கள் நாவலப்பிட்டி  ரயில் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும், சேதமடைந்த தண்டவாளங்கள் இன்னும் சீரமைக்கப்படாததால், அந்த  ரயில் சுமார் இரண்டு மாதங்களாக அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தண்டவாளத்தை உடனடியாகச் சீரமைத்து, போக்குவரத்துச் சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement