• Jan 11 2025

கொழும்பு இரத்தினக்கல் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள்

Chithra / Jan 6th 2025, 11:12 am
image

 

கொழும்பு இரத்தினகற்கள் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினகற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சி வாரயிறுதி நாட்களில் கொழும்பு - உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த கண்காட்சியில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அதிகளவில் பங்குபற்றினர்.

அதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொள்வனவாளர்கள் கலந்துகொண்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த கண்காட்சியின் போது, 20 கரட் ப்ளு சபையார் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்படப்பட்டுள்ளது.

கொழும்பு இரத்தினக்கல் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள்  கொழும்பு இரத்தினகற்கள் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இரத்தினகற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சி வாரயிறுதி நாட்களில் கொழும்பு - உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.இதன்போது, குறித்த கண்காட்சியில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அதிகளவில் பங்குபற்றினர்.அதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொள்வனவாளர்கள் கலந்துகொண்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், குறித்த கண்காட்சியின் போது, 20 கரட் ப்ளு சபையார் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்படப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement