• Nov 14 2024

சிறுநீரக மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிர்ச்சி; ஊசிகளுக்கு தட்டுப்பாடு!

Chithra / Nov 2nd 2024, 9:25 am
image

 

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், உடலுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோடியம் பைகார்பனேட் தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு ஆண்டுகளானதே சோடியம் பைகார்பனேட் தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ வழங்கல் பிரிவு நிறுவனத்திற்கு இதுவரை ஓர்டர்களை வழங்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து இறக்குமதி செய்யுமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மற்றுமொரு நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரக மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிர்ச்சி; ஊசிகளுக்கு தட்டுப்பாடு  சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும், உடலுறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோடியம் பைகார்பனேட் தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு ஆண்டுகளானதே சோடியம் பைகார்பனேட் தடுப்பூசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மருத்துவ வழங்கல் பிரிவு நிறுவனத்திற்கு இதுவரை ஓர்டர்களை வழங்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேவேளை, உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து இறக்குமதி செய்யுமாறு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மற்றுமொரு நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதிலும், இதுவரை அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement