தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் கண்டு, வாகன தரிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தலதா மாளிகை யாத்திரைக்காகப் புறப்படும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கரை வழங்குமாறு இலங்கை பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க இடது மூலையின் மேல் தெளிவாகத் தெரியும் வகையில், சாரதியின் பார்வைக்கு இடையூறாகாத வகையில் ஒட்டப்பட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகனங்களை இலகுவில் அடையாளம் காண ஸ்டிகர் அறிமுகம் தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் கண்டு, வாகன தரிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தலதா மாளிகை யாத்திரைக்காகப் புறப்படும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கரை வழங்குமாறு இலங்கை பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது. அதன்படி, பக்தர்கள் இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க இடது மூலையின் மேல் தெளிவாகத் தெரியும் வகையில், சாரதியின் பார்வைக்கு இடையூறாகாத வகையில் ஒட்டப்பட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன், பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.